226
நிதிநிலை அறிக்கை மீது
அரசும் தடை போடவில்லை. இருந்தாலும் மதுவிலக்குச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில் சிலருக்குத் தண்டனை கூட கிடைக்கிறது. ஆனால் மதுவிலக்கினால் எந்தத் தீமையும் குறையவில்லை. எந்தத் தீமையைப் போக்க மதுவிலக்குக் கொண்டு வரப்பட்டதோ, அது முன்பைவிட இப்போது அதிகமாக உள்ளது. குடிப்பவர்கள் தங்களையும் கெடுத்து தங்கள் குடும்பங்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்தபட பர்மிட்களையும், மதுக் கஷாயத்தையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்கள் மதுவினால் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாடு அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் யாருமே மது அருந்தாது இருக்கச் செய்ய முடியாத நிலையிலே உள்ளது. பணம் இழந்தாலும், லட்சியம் பூரணமாக நிறைவேறியபாடில்லை. மேலே கூறப்பட்ட கருத்தும், கொள்கையும் என்னுடையது மட்டுமல்ல, தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இது உடன்பாடு ஆனது. அவருக்கு மாறுபாடு இருக்குமானால், எனது அறிக்கைக்கு மாற்று அறிக்கை விடுத்து இருப்பார். ஆகவே கலைஞருை கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்றுதான். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும் - எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும் - மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையைவிட இந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்ற இலட்சியப் பிடிப்பைவிட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிக பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும் என்று எனது அருமை நண்பர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைக்கே சொன்னார்.
அதுமட்டுமல்ல, அவர் ஆனந்தவிகடன் பத்திரிகையில் "நான் ஏன் பிறந்தேன்" என்ற அந்த நீண்ட தொடர் கட்டுரையிலேகூட அப்போதே, புள்ளி விவரங்களை