கலைஞரின் சட்டமன்ற உரைகள்
23
பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் 1979-80ல் லாபம் 1.90 லட்ச ரூபாய். 1980-81ல் நஷ்டம் 57.74 லட்ச ரூபாய். தமிழ்நாடு பாரஸ்டு பிளான்டேஷன் கார்ப்பரேஷன் 1979-80ல் நஷ்டம் 9.11 லட்ச ரூபாய். 1980-81ல் நஷ்டம் 20.89 லட்ச ரூபாய். இதுபோல மொத்தம் 19 தொழில்களில் ஏற்பட்டுள்ள நஷ்டம் 1979-80ல் 7 கோடி ரூபாய் என்றும் 1980-81ல் 9 கோடி ரூபாய் என்றும் இந்த அவையில் அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு அடுத்த ஆண்டுகளில் மேலும் மேலும் நஷ்டம் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நஷ்டத்தை நாம் இங்கே எடுத்துக்காட்டுகின்ற காரணத்தால் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய நாங்கள் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவரே நஷ்டங்களை சுட்டிக்காட்டியிருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அதை ஈடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு பஸ் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக் கிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த நஷ்டங்களுக்குக் காரணம் கட்டணத்தை உயர்த்தாதது அல்ல என்பதையும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறாத காரணத்தினால் - நிர்வாக இயந்திரத்தில் பழுது இருக்கிற காரணத்தினால் ஆக்கப்பூர்வமான பணிகள் இந்தத் தொழில்களில் நிர்வாக ரீதியாக நடைபெறாத காரணத்தால் இத்தகைய நஷ்டத்திற்கு இந்தத் தொழில்கள் ஆளாகி யிருக்கின்றன என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
உ
இன்று மிகப்பெரிதாக இந்த மாநிலத்தில் விவாதிக்கப் படுகின்ற பிரச்சினை உணவுப் பிரச்சினை. நான் இந்த உணவுப் பிரச்சினை குறித்து சில கருத்துக்களை விவரமாகக் கூற விரும்புகிறேன். அதற்கு முன்பு நான் ஏதோ மத்திய அரசுக்குச் சார்பாக வாதாடுகிறேன் என்று யாரும் தயவுசெய்து கருதிக் கொள்ளவேண்டாம். இப்போது அவர்கள் 5 ஆயிரம் டன் அரிசியும் 5 ஆயிரம் டன் கோதுமையும் அனுப்பியிருப்பது எதிர்கட்சித் தரப்பில் உள்ளவர்களும், ஆளும் கட்சித் தரப்பில் உள்ளவர்களும் எடுத்துக்காட்டியதுபோல் "யானைப் பசிக்கு