254
நிதிநிலை அறிக்கை மீது
2 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டு விதிக்கப்படும்.
ஒருமுனை வரி
தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஜவ்வரிசி கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு வரிச் சலுகை ஏற்கெனவே 5 சதவிகிதம் பலமுனை வரிக்குப் பதிலாக 4 பர்செண்ட் பலமுனை வரிச் சலுகையாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட ஒருமுனை வரி முறைப்படி 8 சதவிகிதத்திற்குப் பதிலாக இனி 4 சதவிகிதம் ஒருமுனை வரி விதிக்கப்படும். இதில் கூட்டுறவுச் சங்கம் சாராத இதர வணிகர்களுக்கு 5 பர்செண்ட் ஒருமுனை வரி விதிப்பாக மாற்றியமைக்கப்படும்.
எலெக்ட்ரானிக்ஸ் இதிலே கூட சில குறைபாடுகள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. கர்நாடகத்திலே டி.வி.க்கு 3 பர்செண்ட். மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 6 பர்செண்ட். ஆந்திராவிலே 2 பர்செண்ட். கேரளாவிலே 4 பர்செண்ட். குஜராத்திலே 8 பர்செண்ட். இப்போது நாம் 4 பர்செண்ட் என்று ஆக்கினோம். அதையும் குறைக்க வேண்டும் என்று அவர்கள் இன்றைக்கு வாதிடுகிறார்கள். எனவே ஒரு சமரசமாக இனிமேல் அது 3 பர்செண்ட் என்கின்ற அளவுக்குக் குறைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈட்டுறுதித் திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் பேசினார்கள். இரண்டு மூன்று முறை திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர்களும் இந்த மாமன்றத்திலே அதைப் பற்றி கருத்து கூறியிருக்கிறார் 10 ரூபாய் விவசாயத் தொழிலாளர் களிடத்திலே பெற்று அந்தப் பணம் திருப்பிச் செலுத்தப்பட வில்லை என்று சொன்னார். இதைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்ல விரும்புகிறேன் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குறு விவசாயிகளுக்கென ஒரு ஈட்டுறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் 1984ல் ஏற்படுத்தப் பட்டது. அரசு ஆணை எண் 1503, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தேதி 5.8.1989ல் இது நிறுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் நிறுத்தப்படுவதற்கு முன்பே, அதாவது அரசாணை எண் 1255, தொழிலாளர்