உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

நிதிநிலை அறிக்கை மீது

திட்டத்தின்படி, நடப்பாண்டில் 10,517 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. எனவே இந்தத் திட்டத்தில் 2,000 ரூபாய் என்ற நிதி இந்த ஆண்டிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்பதையும், இதற்குக் கூடுதல் செலவு 112 கோடி ரூபாய் ஆகும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரத்தினுடைய ஆட்டோ பிரச்சினை பற்றி மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதைப் பற்றிக் கலந்தாலோசித்து ஒரு அறிக்கையை இங்கே தர விரும்புகிறேன். 30.6.1989 வரை சென்னையில் 5,846 ஆட்டோ பர்மிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் 4,304 ஆட்டோ பெர்மிட்டுகளும், செங்கை-அண்ணா மாவட்டத்தில் 31.12.1989 வரை, 3,560 ஆட்டோ பெர்மிட்டுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் ஆட்டோ பெர்மிட்டுகள் கொடுப்பதற்குத் தடைகள் இப்போது எதுவும் இல்லை

சென்னையிலே புதிய ஆட்டோ பெர்மிட் வழங்கப் படாத காரணத்தால், செங்கற்பட்டு, சைதாப்பேட்டை, திருவள்ளூர் போன்ற புறநகர்ப் பகுதிகளில், ஆட்டோ பெர்மிட் பெற்றவர்கள் அந்த ஆட்டோக்களை சென்னைக்கு ஓட்டி வருகிறார்கள். மேலும் சென்னை நகரத்தில் பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் புழக்கத்தில் இருப்பதாகவும், ஒரே பெர்மிட்டில் இரண்டு, மூன்று ஆட்டோக்கள்

அதற்கு ஒரு சில

ஓடிக்

அரசு

கொண்டிருப்பதாகவும், அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும், இவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களுக்குச் சாதகமாக பெர்மிட் முறை அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓட்டுபவர்களை விட இந்த ஆட்டோ பெர்மிட்டுகளை முடக்கி வைத்திருப்பவர்கள் அதிக லாபம் அடைகிறார்கள் என்றும், அந்த பெர்மிட்டுகளுக்குத் தடை இருந்த போதிலும் 1986 அக்டோபர் வரை அவ்வப்போது தடைகளைத் தளர்த்தி புதிய பெர்மிட்களை அரசு கொடுத்து வந்தது என்றும், இதனால், முறைப்படி ஒரு கொள்கையை அரசு கடைப்பிடிக்காத காரணத்தால், காரணத்தால், ஆட்டோக்களை போக்குவரத்திற்கு உபயோகப்படுத்துகின்ற பொதுமக்கள்