264
3
நிதிநிலை அறிக்கை மீது
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எங்கள் தந்தையார் வரைந்த திருவள்ளுவர் திருவுருவப்படத்தின் உரிமையைத் தமிழ்நாடு அரசு பெற்றுக்கொண்டு எங்களுக்கு உதவும்படி எங்கள் தந்தையின் செயற்கரிய செயலைக் கண்டு உளம்மகிழ்ந்து தங்களின் மேலான முடிவுக்குப் பெரு மகிழ்வும் திருப்தியும் அடைகிறோம். எனக் குறிப்பிட்டு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தோம். எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு கருணை உள்ளத்தோடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ரூபாய் இலட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் செய்தித் துறை இயக்குநரால் இன்று (26.3.1990) சொல்லப்பட்டது. இந்த 3 இலட்ச ரூபாய்க்கு எங்கள் தந்தையார் வரைந்த திருவள்ளுவர் திரு உருவப் படத்தின் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவதில் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் முழுமையான சம்மதம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பாகச் சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தருவோம்." என்று குடும்பத்தார் கையெழுத் திட்டுள்ள கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள்
இதுவன்னியில் பாரதிதாசனுடைய நூல்களை அரசுடைமையாக ஆக்க வேண்டும் இந்த நூற்றாண்டு விழாக் காலத்திலே என்ற முயற்சியைப்பற்றி நானும் கல்வியமைச்சர் அவர்களும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்தக் குடும்பத்தாரோடு அதைப்பற்றித் தொடர்பு கொண்டிருக்கிறோம். விரைவில் அதிலும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்
மே தினத்தையொட்டி சென்னை மாநகரத்தில்- தமிழகத்தின் தலைநகரத்தில் மே தினச் சின்னம் ஒன்று அமைக்க வேண்டுமென்று நம்முடைய நண்பர் வரதராஜன் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த மே தினத்திலே நிச்சயமாக நடைபெறும் என்பதையும் நான் தெரிவித்துக் கொண்டு, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவரும் மற்றும் கட்சிகளுடைய தலைவர்களும் எனக்கு ஆக்கபூர்வமாகவும், ஆதரித்தும் எதிர்த்தும் தந்துள்ள