உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

நிதிநிலை அறிக்கை மீது

இன்றைக்குக்கூட ஒரு அறிக்கை வந்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கூலி ஆட்களைப் பிடித்து கோட்டை வாசலில் வந்து சத்தம் போடச் செய்தார்கள் என்று, கோட்டை வாசலிலே வந்து முழக்கம் இட்டவர்கள் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய வாரிசுகள் என்று சொல்லத்தக்க ஆர்.எம். வீரப்பன் அவர்களும் மற்றவர்களும் தான். கோட்டை வாசல் வரையிலே ஊர்வலமாக வந்து என்னிடம் மனுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் யாரும் கூலிக்குப் பிடிக்கப்பட்ட ஆட்கள் அல்ல. எம்.ஜி.ஆர். அவர்களுடைய வாரிசு என்று சொல்லிக் கொள்கிறவர்கள். எப்படி, தம்பி திருநாவுக்கரசு தன்னை எம்.ஜி.ஆர். உடைய வாரிசு என்று சொல்வது உண்மையோ அதைப்போல ஆர்.எம். வீரப்பன் தன்னை எம்.ஜி.ஆர் உடைய வாரிசு என்று உண்மைதான். அவர்களெல்லாம் கூலிக்குப் பிடிக்கப்பட்ட ஆட்கள் அல்ல. என்ன செய்வது? 'இருங்கலூர் கணக்கன் இருந்தும் கெடுக்கிறான், செத்தும் கெடுக்கிறான்' என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

சொல்லிக்கொள்வது

இந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும் பாராட்டியிருக் கிறார்கள். அந்தப் பாராட்டுக்களையெல்லாம் தொகுத்துச் சொன்னால், ஏதோ என்னை நானே புகழ்ந்து கொள்வது போலாகும் என்ற நிலை ஏற்படும் என்றாலும்கூட, இந்த வரவு-செலவுத் திட்டம் எந்த நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது என்பதைப் பல

முனைகளிலே உள்ளவர்கள் எப்படிப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, அவற்றில் ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூடெல்லியி லிருந்து வெளிவந்த பத்திரிகையில் 18.7.1996இல் குறிப்பிடப் பட்டுள்ள வாசகம் :

"Chief Minister M. Karunanidhi on Wednesday presented a business and industry-friendly Budget for 1996-97 and announced a long-term taxation policy."

அதே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா', மும்பை. பழைய பம்பாய் எடிஷன், 18th July 1996- "... Karunanidhi pleases every- one with his Budget. Chief Minister Karunanidhi on Wednesday