கலைஞரின் சட்டமன்ற உரைகள்
277
மாவட்டங்களுக்கு அந்தத் திட்டத்தினுடைய தொகை நேரடியாகப் போய்விடுகிறது. எனவேதான் இந்த வித்தியாசம் ஏற்பட்டது என்பதை என்பதை அவர்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்
நான்
அதுபோலவே பொதுவான பணிகளில் ரூ. 3418 கோடி ரூபாய் என்பது ரூ. 3,821 கோடி ரூபாயாக இப்போது மாறியிருக்கிறது. பொதுவான பொதுவான பணிகளுக்கு பணிகளுக்கு அதிகம் செலவழிக்கக்கூடாது என்பது அவருடைய வாதம். அந்த வாதப்படி பார்த்தால் 19.31 சதவீதம் இப்போது 11.78 சதவீதமாகத்தான் மாறி இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட் என்று பரவலாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த பற்றாக்குறை பட்ஜெட்டை வைத்துக்கொண்டு முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்று - நம்முடைய கட்சிகளின் தலைவர்கள் பல பேருடைய அறிக்கைகள், இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டவுடன், கருத்துக்கள் கேட்டபோதும், அதற்கு உடனடியாகச் சொல்லப்பட்ட கருத்துக்கள், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் உட்பட, பெரும் பற்றாக்குறை இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறார் என்று வருத்தத்தை அல்லது வியப்பைத்தான் அனைவரும் தெரிவித்தார்கள். இவர்கள் தெரிவித்து எப்படியாவது சமாளித்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு. ஆனால் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தெரிவித்த கருத்தில் ரூ. 12,107 கோடி செலவுக்கான பட்ஜெட்டை கருணாநிதி சமர்ப்பித்துள்ளார் - அவர்
கருணாநிதி என்றுதான் சொல்லுவார் -ரூ.1038 கோடி பற்றாக்குறையைச் சரிக்கட்ட என்ன வழியைக் கையாளப் போகிறார் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். வருவாய்க் கணக்கில் இந்த ஆண்டு 1038 கோடி ரூபாய் பற்றாக்குறை என்பது உண்மைதான். ஆனால் கடந்த ஆண்டுகளின் நிலைமைகளை அம்மையார் அவர்கள் மறந்துவிடக்கூடாது. 1988-89 ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 217.56 கோடி ரூபாய். ரூபாய். ஒட்டுமொத்த பற்றாக்குறை 325.07 கோடி ரூபாய். 1989-90இல் வருவாய்ப்