உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

303

கட்சித் தலைவர் அன்பிற்குரிய நண்பர் மூப்பனார் அவர்களும், மத்தியிலே நிதி அமைச்சராக இருக்கின்ற அன்பிற்கினிய நண்பர் சிதம்பரம் அவர்களும், பாராட்டி, வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். பல கட்சித் தலைவர்களும் தங்களுடைய நற்கருத்துக்களை இந்த அறிக்கைக்கு சார்பாக வெளியிட்டு இருக்கின்றார்கள். ஏடுகள் பல ஆங்கில ஏடுகள், தமிழ் ஏடுகள், தலையங்கங்களின் மூலமாக தங்களுடைய ஆதரவைக் காட்டியிருக்கின்றார்கள். வணிகப் பெருங்குடிமக்கள், தொழிலாளத் தோழர்கள். பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள், சாதாரண சாமானிய மக்கள் அனைவரும் இந்த நிதிநிலை அறிக்கை தங்களுக்கு மிகமிகப் பிடித்தமான ஒரு அறிக்கை என்பதை பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றார்கள். நான் இந்த அறிக்கையிலே மிக முக்கியமாக குறிப்பிட்டு காட்டியிருக்கின்ற சில திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே எடுத்து காட்டியதற்கு ஒப்ப, இங்கே மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி, அவை சற்று விரிவாகச் சொல்ல

விளக்கங்களை

பற்றிய விரும்புகிறேன்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற தலைப்பிலே தொகுதிக்கு ஒரு கிராமத்தை, முதற்கட்டமாக இந்த ஆண்டு தத்து எடுத்துக்கொண்டு, அந்தக் கிராமத்திலே, கிராமப்புற மக்களுடைய கல்வி, அவர்கள் பொருளாதார நிலையிலே மேம்பட்டு திகழவேண்டும் என்கின்ற அந்த ஆர்வம், இவைகளை எல்லாம் நெஞ்சில் தேக்கி, குறிப்பாக, தவத்திரு குன்றக்குடி அடிகளார் எப்படி குன்றக்குடி கிராம மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி பலரும் போற்றுகின்ற வண்ணம் அதைச் செய்தாரோ அதைப்போல அதனினும் மேம்பாடான வகையில் தத்து எடுக்கப்படுகின்ற கிராமங்கள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வளரவேண்டும். வளர்க்கப்படவேண்டும். வலுவாக்கப்படவேண்டும், நிரந்தர மாக வளம்பெற்று இருக்க வேண்டும் என்ற அந்த நிலையை இந்த அரசு மேற்கொள்ள இருக்கிறது.

கிராமப்புற பாசன திட்டங்களைப் பற்றி நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு காலத்திலே