உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

நிதிநிலை அறிக்கை மீது

ஆயத்தமாக இருக்கவேண்டும். அவர்கள் எல்லாம் ஓடிய பிறகு நாம் ஓட ஆரம்பிக்கக் கூடாது. முதலிலேயே இந்த ஓட்டத்திற்குத் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வருங்காலத்தில் இந்தியாவும் இந்தத் துறையிலே ஒரு வல்லரசு நாடாகத் திகழ வாய்ப்புகள் உருவாகும்போது தமிழகம் அதிலே பின்தங்காமல் இருக்க நாம் இந்த நிறுவனத்தைத் தொடங்குகிறோம்.

அப்படிப்பட்ட தகவல் துறை வல்லரசாக இந்தியா திகழ்கிற நேரத்தில் தமிழகத்தின் பாடி வீட்டிலிருந்து புறப்படு கின்ற சிப்பாய்களாக இளைஞர்கள் உலகம் எங்கும் சென்று புகழ் சேர்க்க வேண்டும் என்ற என்னுடைய தணியாத ஆசையைத் தான் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலமாக (மேசையைத் தட்டும் ஒலி) வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக் கிறேன். இந்தியாவுக்கு வருகை தந்த, நான் முதலில் குறிப்பிட்ட பில்கேட்ஸ் சொன்னார்' குழந்தைகள் டி.வி.யின் முன்னால் நேரத்தைச் செலவிடுவதைவிட கம்ப்யூட்டர் முன்னால் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, எதிர் காலத்தில் கணிப்பொறியை நாம் பேச வைக்கவும், சிந்திக்க வைக்கவும், பார்க்க வைக்கவும் வேண்டும். சாதாரண பாமர மனிதனோடு அது உரையாடவும் வேண்டும். கணிப்பொறி உரையாடவும் வேண்டும். எங்கள் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் கனவு அதுதான் என்று அவர் குறிப்பிட்டிருக் கிறார். அவரது கனவைப் படிக்கும்போது தமிழ்நாட்டு இளைஞர்கள் அந்தத் துறையிலே நுழைந்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தோடுதான் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது என்பதை மீண்டும் ஒரு முறை அவைக்கு நினைவுபடுத்துகிறேன்.

மற்றும் ஒரு திட்டம், மத்திய அரசின் சார்பாக, மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்ற திட்டம் வாணிபம் சார்ந்த பெண்தொழில் முனைவோர் உதவி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் Trade Related Entrepreneurship Assistance and Development for Women என்ற திட்டம். இதை TREAD என்று சுருக்கமான பெயரில் அழைக்கிறார்கள். மத்திய அரசின் உதவியோடு பெண் தொழில் முனைவோர் உதவித்