30
நிதிநிலை அறிக்கை மீது
பேசலாம். ஆனால், இந்த மன்றத்திலே அவைக் குறிப்பிலே என்னுடைய பேச்சு ஏறியிருக்கிறது. சத்துணவுத் திட்டம் பற்றி சில மாற்றுக் கருத்துக்களை நாங்கள் சொன்னோமே தவிர, புறம்பான கருத்துக்களை நாங்கள் எடுத்துக்கூறவில்லை. இந்த முறையினால் ஊழல்கள் பெருகிடக்கூடும். தவறுகள் நடந்திடக் கூடும். எனவே இதற்குப் பதிலாக வேறு ஒரு மாற்று முறையின் மூலம் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கலாம் என்ற கருத்தைத்தான் இந்த அவையில் நான் குறிப்பிட்டிருக் கிறேன்.
ஆனால் இங்கும் வெளியிலும் தேர்தல் பிரச்சாரங் களிலும் 'சத்துணவு போடுகின்ற முதலமைச்சருக்கா? அல்லது சத்துணவு வேண்டாம் என்கிற கருணாநிதிக்கா' என்கிற அளவுக்குக் கேள்விகள் விசுவரூபம் எடுத்து ஏதோ சத்துணவு திட்டத்திற்கே நாங்கள் விரோதிகள் என்பதைப் போன்ற ஒரு பாவனை, அதற்குக் காட்டப்பட்டதை உள்ளபடியே நான் வேதனையோடு குறிப்பிடுகின்றேன். சத்துணவு சத்துணவாக இருக்க வேண்டுமென்பது எங்களுடைய கருத்தே தவிர வேறு அல்ல.
5000 அல்லது 10000 அல்லது 20,000 ரூபாய்க்கு ஒரு சத்துணவுக் கூடம் கட்டப்படுகிறதென்றால், அந்தக் கூடத்தினுடைய திறப்பு விழாவுக்கு ரூ. 2 இலட்சம், ரூ.3 இலட்சம் செலவழிக்கப்பட்டால், இந்த வீண் விரயங்கள் எல்லாம் தவிர்க்கப்படக்கூடாதா என்று நாங்கள் கேட்பது சத்துணவுத் திட்டத்திற்கு நாங்கள் எதிரிகள் என்று ஆகிவிடாது.
நம்முடைய நிதியமைச்சர், ரேஷன் கார்டுகளுக்கு இருபது கிலோ அரிசி மாதம் ஒன்றுக்குத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டார். ஆனால் நம்முடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னிடத்திலே ஒரு குறிப்பைத் தந்திருக்கிறார்கள். அதாவது தென்னாற்காடு மாவட்டத்தில் 1.2.1983 முதல் 15 நாட்களுக்கு ஒரு கார்டுக்கு மூன்று கிலோ அரிசிதான் தரப்படுகிறது. அதாவது 1.2.1983 முதல் மூன்று கிலோ அரிசி 15 நாளைக்கு; மாதத்திற்கு ஆறு மாதத்திற்கு ஆறு கிலோ அரிசிதான் தரப்பட்டது. அதையும் இப்பொழுது மாற்றி 1.3.1983 முதல்