உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

நிதிநிலை அறிக்கை மீது

அதைப்போல 150லிருந்து 200 யூனிட் வரை என்று பார்த்தால் ஆந்திராவில் 165 காசு, கர்நாடகாவில் 130 காசு, கேரளாவில் 150 காசு, மராட்டியத்தில் 220 காசு, குஜராத்தில் 137 காசு, மேற்கு வங்கத்தில் 154 காசு, தமிழ்நாட்டில் 120 காசு. இப்படித்தான் மின் கட்டண உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைகளை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் என்று திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய ஆட்சியில் - அவர் களுடைய ஆட்சியில் என்றால் கோபித்துக் கொள்ளக்கூடாது

-

அவர் அப்போது ஆட்சியில் இல்லை என்றாலும்கூட, இப்போது அவர்களுடைய ஆட்சி என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட அவர்களுடைய ஆட்சியில் மின்கட்டண உயர்வு வீட்டு உபயோகத்திற்கு மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 25 யூனிட் வரை 50 யூனிட் வரைகூட அல்ல 25 யூனிட் வரை 1.3.1994 முதல் 55 பைசாவிலிருந்து 65 பைசாவாக உயர்த்தப்பட்டது 25 யூனிட்டுக்கே. பிறகு 1.3.1994ல் 25 யூனிட் முதல் 50 யூனிட் வரை 65 பைசா என்று இருந்தது 75 பைசாவாக உயர்த்தப்பட்டது. பிறகு 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை 90 பைசா என்று இருந்தது 100 பைசாவாக உயர்த்தப்பட்டது. 101 முதல் 300 யூனிட் வரை, 1.3.1993 முதல் 90 பைசா என்பதை ஒரு ரூபாய் 10 காசு என்றும், 1.3.1994 முதல் ஒரு ரூபாய் 30 காசு என்றும் 1.2.1995 முதல் ஒரு ரூபாய் 50 காசு என்றும் அதை உயர்த்தினார்கள். அப்படி உயர்த்தப்பட்டதுதான். இன்றைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறதே அல்லாமல், வேறு அல்ல. ஏற்கெனவே இந்தக் கட்டங்களில் எல்லாம் கடந்த ஆட்சியிலே, செல்வி ஜெயலலிதா ஆட்சியிலே இவை எல்லாம் உயர்த்தப்பட்டிருக்கின்றன என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

300 யூனிட்டுக்கு மேல் 1.3.1993 முதல் 1.40 என்பதை 1.65 என்றும், 1.3.1994 முதல் 1.65 என்பதை 1.90 என்றும், 1.2.1995 முதல் 1.90 என்பதை 2.20 என்றும் அவர்கள் உயர்த்தினார்கள். அதை இப்போது நாம் 2.50 என்று உயர்த்தி இருக்கிறோம். உயர்த்திக் கொண்டே போனார்கள், பல படிகளைப் போட்டார்கள். மேலும் ஒரு படியை நாம் போட்டிருக்கிறோம்.