உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

337

எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்தார்கள். என்ன தீர்ப்பு வந்தது என்றால், புரட்சிகரமான சட்டம்; இந்தச் சட்டத்தை மறுப்பது சரியல்ல; அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று. பேருந்துகளை தேசியமய மாக்குகின்ற சட்டத்தை வரவேற்று பாராட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று கருதியிருந்தபோது, அதற்கு மாறாக தனியார் களுக்கு பேருந்துகளை ஒதுக்குவது என்ற நிலை தமிழகத்திலே அப்போது ஏற்பட்டது. அதை மறுத்தும், எதிர்த்தும் பல குரல்கள் தமிழ்நாட்டில் கிளம்பின. அந்தக் குரல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் சொந்தமான கருத்து உண்டு என்பதை இந்த மாமன்றம் மிக நன்றாக அறியும்.

அதற்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், அலங்கோலங்கள், எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு உருவான ஆட்சியிலே ஏற்பட்ட பல அலங்கோலங்கள், ஊழல்கள் இவைகளின் காரணமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 15,737 இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியார் பேருந்துகள் - சரியாகச் சொன்னால் - 5,736 தனியார் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தனியார் பேருந்து கடந்த காலத்தில், நாம் ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், உங்களுக்கெல்லாம் தெரியும். எல்லா உறுப்பினர்களும் கவலையோடு என்னிடத்திலே தெரிவித்து இருக்கின்றீர்கள் கிராமங்களுக்கு இந்தப் பேருந்துகள் போகாமல் இருப்பதற்கு பேருந்து முதலாளிகள் எல்லாம் சேர்ந்து கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டிவிட்டு, அவர்கள் நாங்கள் இஷ்டப்படி எங்கு செல்வோமோ அங்குதான் செல்வோம்; கிராமங்களுக்குச் செல்ல மாட்டோம் என்று curtailment என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதற்குப் பல கோடி ரூபாய் அவர்கள் செலவழித்தார்கள். நாட்டுக்குத் தெரியும். உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆட்சிக்கு நாம் வந்தவுடன், அந்தச் சுமை நம் தலையில்தான் விழுந்தது. மக்களுடைய வசைகள், ஏச்சு, பேச்சு எல்லாம் நம் தலையில் தான் விழுந்தது. இந்த ஆட்சி வந்தது. கிராமங்களுக்குப்

12-

-க.ச.உ. (நிஅ) ப-2