கலைஞரின் சட்டமன்ற உரைகள்
339
ஓரப் பாதைகளில் அந்த வேன்கள் செல்கின்ற கோரக்காட்சியை நான் பார்த்திருக்கிறேன். கவிழ்ந்தால் 50 பேர் சாவார்கள். அப்படிப்பட்ட நிலைமையிலேதான் அங்கே போக்குவரத்து இருந்தது. இன்னும் அது சீரடைந்து விட்டதா என்றால், இன்னும் உண்மையாகச் சீரடையவில்லை. இன்னும் அந்த கிராமங்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் குறிப்பாக வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்படுகிற தமிழகத்திலே அத்தகைய கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அத்தகைய குக்கிராமங்களில், பட்டிதொட்டிகளில் இருக்கின்ற ஏழையெளிய மக்கள் பேருந்துகளிலே செல்லக்கூடிய வசதியைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேன் மினி பேருந்து திட்டமே தவிர வேறல்ல.
செய்து
அந்தத் திட்டத்தை பரீட்சார்த்தமாகச் பார்ப்போம். அதை தேசியமயமாக்க சர்க்கார்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால், எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பேருந்து போகிற தடங்களில் இந்த வேன்களை அனுமதிக்கமாட்டோம். பேருந்து போக முடியாத கிராமங்களுக்குத் தான் இந்த வேன்கள் செல்ல முடியும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதனால் பெரிய தொல்லை ஒன்றும் வந்துவிடாது; ஊழல் ஒன்றும் நடைபெற்றுவிடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்றால் பிறகு எடுக்க வேண்டிய நடவடி நடவடிக்கை எடுக்கலாம் எடுக்கலாம் என்பதையும் நான் குறிப்பிடு கின்றேன்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சிப் பணி குறித்து திரு. குமாரதாஸ் அவர்களும் மற்றும் பல தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டு இருக்கின்றார்கள். இந்த வறட்சி நிலையைக் கேள்விப் பட்டவுடன் தென் மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆங்காங்குள்ள அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லாம்கூட வந்து கலந்து கொண்டார்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள்; ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், உள்ளாட்சித்