உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

நிதிநிலை அறிக்கை மீது

முறையாக எடுக்கப்படாத காரணத்தால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1982ஆம் ஆண்டிலிருந்துதான் அந்த வேலைகள் என்றால், இன்னமும் முடிந்ததா என்று அந்த அறிக்கையில் வைக்கப்படுகிற வரை தெரியவில்லை என்று சொல்கின்ற அளவுக்கு அந்த அறிக்கை அவையிலே வைக்கப் பட்டிருக்கிறது.

The stock of sick transformers had increased from 692 as on 31st March 1978 to 1362 as on 31st March 1980 due to insufficiency of repairing facilities and inadequacy of staff.

1978ல் 692 ஆக இருந்த பழுதுபட்ட டிரான்ஸ் பார்மர்கள் 1980ல் 1362 ஆக பெருகிவிட்டன பருகிவிட்டன என்றும் அறிக்கை குறை கூறுகிறது.

Due to delay in processing the tenders for purchase of transformers and making purchases of additional requirement from another firm at higher rate resulted in an additional expenditure of Rs.13.63 lakhs to the Board.

டிரான்ஸ்பார்மர் வாங்குவதில், டெண்டர்களைப் பரிசீலிக்க ஏற்பட்ட தாமதத்தால், 13 இலட்சம் ரூபாய் நஷ்டம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே அறிக்கையில் 149 ஆம் பக்கத்தில் மின்சாரம் சப்ளை செய்யும்பொழுது இடையிலே அதிகமான அளவிற்கு ணாக்குவதை, விரயத்தை,

தடுப்பதற்காக ஷென்ட் கெபாசிட்டர்ஸ் பொருத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 44 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஷெண்ட்கெபாசிட்டர்ஸ் வரவழைக்கப்பட்டு, 1977-ஆம்ஆண்டு ஜனவரி மாதத்தில் இது பெறப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஷென்ட் கொபசிட்டர்ஸ் பொருத்தப்பட்டதா என்றால், இல்லை. 1977 செப்டம்பர் மாதம் வரையிலே பொருத்தப்படவில்லை. பிறகு தலைமைப் பொறியாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். இன்னும் 6 மாதத்திற்குள்ளே பொருத்தப்படாவிட்டால் அந்த இயந்திரம் கெட்டுவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். இதற்குப் பிறகும், இன்னும் சீரான செயல்முறைத்திட்டம் இல்லாததால், 1981ஆம் ஆண்டு இதில் 3 இயந்திரங்கள் மாத்திரம் பொருத்தப்பட்டு, இன்னும் ஒன்று பிப்ரவரி 1982 வரை