உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

353

கேபிள் டி.வி. பற்றி எல்லோரும் பேசினார்கள். குறிப்பாக திரு. திருநாவுக்கரசு அவர்கள், இறுதியாகப் பேசிய கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆளுங் கட்சியின் சார்பிலும் பேசியிருக்கிறார்கள். 20 சதவீதம் என்பதை 20 ரூபாய் என்று மாற்றினோம். அது அதிகம், கிராமப் பகுதிக்கு அதைக் குறைக்க வேண்டுமென்ற கருத்து சொல்லப்பட்டது. அந்தக் கருத்துக்களை ஏற்று, மாநகராட்சிப் பகுதிக்கு 20 ரூபாய் என்றும், நகராட்சிகளில் 15 ரூபாய் என்றும் மாநகராட்சி, நகராட்சி தவிர மற்ற இடங்களுக்கு 10 ரூபாய் என்றும் விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மின்னணுப் பொருட்களைப் பற்றிப் பேசப்பட்டது இதைப் பற்றி நம்முடைய வரி சீர்திருத்தக் குழுவிலே உறுப்பினராக இருந்த திரு. சொக்கர் அவர்களும்கூட கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மின்னணுப் பொருள்களின் பாகங்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கு நிதிநிலை அறிக்கையில் 11 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது இந்த 4 சதவிகிதத்தையும் குறைக்க வேண்டுமென்று அரசுக்கு வந்த வேண்டுகோளை ஏற்று மின்னணுப் பொருட்களின் பாகங்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கு Electronic Parts 2 சதவீதமாக வரி குறைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

and accessories

இறுதியாக நேற்று நம்முடைய நண்பர் திரு. தா. கிருஷ்ணன் பேசும்போது, இந்த நிதிநிலை அறிக்கையிலே நான் கடைசியாகக் கோடிட்டுக் காட்டிய வாசகங்களைப் பற்றி என்னுடைய அருமை நண்பரும், முன்னாள் நிதியதியமைச்சரு மான டாக்டர் நாவலர் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டார்கள். நாவலர் பேசிய இடம் வல்லம். வல்லத்திற்காகப் பேசினார். பிரச்சினை என்னவென்றால் - நண்பர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். அதனுடைய நியாயத்தை அவர் உணருவார் என்று நான் பெரியார் கொண்டிருக்கின்றேன். வல்லத்தில் புரிந்து மணியம்மை கல்லூரி என்று ஒன்று இருக்கிறது. அந்தக் கல்லூரியில் ஏற்கெனவே திருமதி ஜானகி அம்மையார்