உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

357

அவர் கேட்டுவிட்டு, 'வரவு செலவுக் கணக்கைத்தான் சொல்ல வேண்டுமே ஒழிய வாழ்க்கை வரலாற்றைச் சொல்லலாமா' என்று கேட்டிருக்கிறார். வரவு செலவுக் கணக்கை மாத்திரம்தான் சொல்ல வேண்டுமாம். கவர்னர் உரையிலே காள்கை என்ன என்று கேட்கிறவர்கள் சட்டமன்றத்திலே இருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையிலே கொள்கை என்ன என்று கேட்கிறவர்கள் சட்டமன்றத்திலே ஏராளமாக இருக்கலாம். இதிலெல்லாம்கூட நான் புண்படவில்லை. ஆனால் அவர் பேசுகிறார்.

'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்'

என்ற வள்ளுவருடைய குறளை மேற்கோள் காட்டி அவர் சொல்கிறார். அதாவது ஜெயலலிதா கொடுத்ததை நான் கெடுக்கிறேனாம். 'இந்த மாதிரி பொறாமைப்படுகிறவன் சாப்பிட முடியாமல், வேட்டி கட்டமுடியாமல் செத்துப் போய்விடுவான் என்று நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லியிருக்கிறார்' என்று சொல்கிறார்.

பிறந்தவர்கள் எல்லோரும் சாகத்தான் போகிறார்கள். நானும் சாகத்தான் போகிறேன், அவருக்கும், எல்லோருக்கும் அந்த முடிவு உண்டு. அவர் எனக்கு முதலிலே மலர் வளையம் வைக்கப் போகிறாரோ, அல்லது நான் அவருக்கு முதலிலே மலர் வளையம் வைக்கப் போகிறேனோ; அவர் ஆசை நிறைவேறி, நான் முதலில் போய்விட்டால், நான் அவருக்கு மலர் வளையம் வைக்கப் போவதில்லை அது வேறு விஷயம். ஆனால் அந்த அளவுக்கு ஒரு நிதிநிலை அறிக்கையைப் பற்றி பேசுகிற நேரத்தில் ஒரு நிலத்தகராறிலே புகுந்து கொண்டு 'புறம்போக்கு நிலத்தை தாங்கள் எடுத்துக் கொள்ளத்தான்வேண்டும். அதற்காக ஒரு போராட்டம்" என்று கூறி இப்படிப் பேசியிருக்கிறார். நான் பெரியாரிடத்திலே எவ்வளவு பாசம், அன்பு கொண்டவன் என்பதை வெறும் உச்சரிப்புகளால் அல்ல, வார்த்தைகளால் அல்ல, செயலால் காட்டிக்கொண்டு இருப்பவன் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். பெரியாரை, அண்ணாவை, பெருந்தலைவர் காமராஜரை, காயிதே மில்லத்தை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, டாக்டர் அம்பேத்கரை