உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

359

மறந்துவிட்டு அவர்களைப் பாராட்டிக்கூட புத்தகம் எழுதிப் பார்த்தார். அப்படியும் சிலை வைக்கவில்லை. நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்தச் சிலையை நான் திறந்து வைத்தேன். (மேசையைத் தட்டும் ஒலி) இப்போது அந்த அம்மையாருக்கு ஒரு ஸ்டாம்பு வெளியிட வேண்டும் என்று நான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி நேற்று முன்தினம் பதில் வந்திருக்கிறது. நிச்சயமாக இந்த ஆண்டு ருக்மணி லட்சுமிபதியின் ஸ்டாம்பு வெளியிடுவோம் என்று பதில் வந்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)

-

சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கும் ஸ்டாம்பு வெளியிட வேண்டும் என்று நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ தகராறுகள் உண்டு, இந்தச் சட்டமன்றத்திலேயே உண்டு. இருந்தாலும்கூட என்பால் தனிப்பட்ட முறையிலே அன்பு காட்டக்கூடியவர். திருக்குவளையிலே நான் திறந்து வைக்கவேண்டுமென்று - ஒரு தாய் சேய் நல விடுதிக்கு வரவேண்டுமென்று நான் கேட்டபோது காங்கிரஸ்காரர்கள் பலபேர் எதிர்த்தும்கூட, அதையெல்லாம் கேட்காமல் என்ன இருந்தாலும் எதிர்க் கட்சியிலே துணைத் தலைவராக இருக்கிற அவர், அவர் பிறந்த ஊருக்கு அழைக்கிறார், சென்றுதான் தீருவேன் என்று கருப்புக் கொடி காட்டியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு வந்து அந்த விழாவிலே கலந்து கொண்டவர் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள். அவர்கள் மறைந்து இவ்வளவு நாள் ஆகியும் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்புவதாகச் சொன்னார்கள், இன்னும் எழுப்பப்படவில்லை. இந்த ஆண்டு அவருடைய விழாவிலே அவருக்காக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) அவர் வாழ்ந்த அந்த வாரன் ரோடு பக்தவத்சலம் சாலை என்று அழைக்கப்படும் என்று நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

எல்லோரையும் பார்க்கிறேன். நம்முடைய அப்துல் லத்தீப் அவர்கள் மட்டும் வருத்தமாக உட்கார்ந்து கொண்டு