உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

நிதிநிலை அறிக்கை மீது

நியமிக்கவில்லை என்று கேட்டார்கள். கடந்த ஆண்டிலே நிதிநிலை அறிக்கையிலே நான் அறிவித்தது. வளர்ச்சிப் பணிகளைக் கவனிக்க குழு அமைக்கப்படும் என்று அல்ல, ஒரு ‘செல்' ‘Cell' அமைக்கப்படும் என்றுதான் கூறி இருந்தேன், ஒரு பிரிவு அமைக்கப்படும் என்றுதான் கூறியிருந்தேன். அது அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சருடைய அலுவலகத்தி லேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஓய்வு பெற்ற அதிகாரி, Officer on Special Duty என்ற அந்தப் பொறுப்பில் திரு.வெங்கடசுப்ரமணியம், ரிடையர்டு ஐ.ஏ.எஸ். அவர்கள் அந்தப் பணியை இப்போது ஆற்றி வருகின்றார் என்ற விளக்கத்தை அவருக்குத்தர விரும்புகிறேன். இன்னொன்று, கடந்த நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்ட “Right to Infor- mation Act” தகவல் தெரிந்துகொள்கின்ற அந்தச் சட்டம் என்னவாயிற்று என்று கேட்டார்கள். சட்ட அமைச்சர் அதற்கான பதிலைச் சொன்னார்கள். விதிமுறைகளை உருவாக்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று அடுத்த வினா எழுப்பினார்கள். இந்த “Right to Information Act' என்ற தகவல் பெறுகின்ற இந்தச் சட்டம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேதான் முதன்முதலாக இயற்றப்பட்டிருக்கிறது. அதனால், இந்தச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கு எந்த முன்மாதிரிகளும் நமக்கு உடனடியாகக் எனவேதான், அந்த

கிடைக்கவில்லை.

விதிமுறைகளை உருவாக்குவதற்கு காலதாமதம் ஆயிற்று இப்போது அந்த விதிமுறைகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறுகின்ற சூழ்நிலை அமைந்துவிட்டது எனவே, அந்த விதிமுறைகள் விரைவிலே வெளியிடப்படும் என்பதையும் நான் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கையிலே உள்ள சிறப்பு அம்சங்களை

இங்கே உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி, தோழமைக் கட்சியினுடைய உறுப்பினர்கள் எல்லாம் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவற்றை ஒருமுறை நானும் தொகுத்து வழங்கினால் நினைவிலே பதிவதற்கு ஏற்றதாக அமையும் என்பதற்காக அதனை முன்னிலையிலே வைக்க விரும்புகிறேன்.

உங்கள்