உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

373

இருந்த பொதுவான பணிகளின் செலவு இந்த 1998 - 99ல், 46 சதவிகிதமாக உயர்ந்து விட்டது என்று கூறினார். சொல்லும்போதே அவர்கள், 'செலவு' என்று குறிப்பிட்டிருக் கிறார்கள். ஆனால் அவர் இந்தச் சதவிகிதத்தை செலவினங் களிலே பார்க்கக் கூடாது. எப்போதும் வருவாய்க் கணக்கிலே மொத்த செலவினத்திலே இந்த சதவிகிதம் பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் வருவாய்க் கணக்கிலே இந்த ரூபாய் 15 ஆயிரம் கோடியிலேயே பார்த்துவிட்டார்கள். செலவான ரூபாய் 18 ஆயிரம் கோடியிலேதான் சதவிகிதம், எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதுதான்; யார் யாருக்கு எவ்வளவு சதவிகிதம் செலவு செய்கிறோம் என்று பிரித்துப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்காமல் திருநாவுக்கரசு அவர்கள் வருவாய்க் கணக்கிலே மொத்த வருவாயிலிருந்து சதவிகிதக் கணக்கைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் இந்த அளவிற்கு அதிகமாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. உண்மையிலே பார்க்க வேண்டுமென்றால், 1995-96ல் பொதுவான பணிகளுக்கு ஒதுக்கீடு 31.24 சதவிகிதம், 1997 - 98ல் ஒதுக்கீடு 4686.64 கோடி ரூபாய், 31.46 சதவிகிதம். 1998

99ல் ஒதுக்கீடு 6937.9 கோடி ரூபாய். 38.44 சதவிகிதம். எனவே, பொதுவான பணிகளில் செலவினம் மொத்த வருவாய்ச் செலவில் 38.44 சதவிகிதம்தான். அவர் கூறியதுபோல், 46 சதவிகிதம் அல்ல. இருந்தாலும்கூட, அதிகரித்து இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்; அதை மறுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இவர்களுக்கான ஓய்வூதியத் தொகைக்கு மாத்திரம் 1.153 கோடி ரூபாய் ஒதுக்கியிருக் கிறோம். மத்திய அரசு, வங்கி இவைகளுக்கான கடன்களுக்கு வட்டி கொடுப்பதற்குத் தொகை 722 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மேலும், அரசு அலுவலர்களுடைய ஊதிய விகிதத்தை 1.1.1996 என்று கணக்கிட்டு

மாற்றி

அமைப்பதால் ஏற்படும் நிலுவைத் தொகைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கூடுதல் தொகையும் இந்தக் கணக்கின்கீழ் செலவு அதிகரிப்பதற்கான காரணம் ஆகும் என்பதை நான் விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.