கலைஞரின் சட்டமன்ற உரைகள்
377
புரிந்துகொள்ள முடிந்தது. அங்கேயே பல பிரச்சினைகள், .3000 அங்கே வழங்கப்படாத காரணத்தால் அவர்கள் ஹைகோர்ட்டிற்குப் போயிருக்கிறார்கள். அந்த ஹைகோர்ட்டி னுடைய உத்தரவை அரசு செயல்படுத்துவதாகவும் வாக்குறுதி வழங்கியிருக்கிற விவரத்தை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக, இந்த மோசடி நிதி நிறுவனங்களைப் பற்றி இங்கே பேசப்பட்டது. பொதுமக்களால் வைப்பீடு டெபாசிட் - செய்யப்படும் தொகைக்கு மிக அதிகமான அளவிலான வட்டி விகிதம் அளிப்பதாகவும், கவர்ச்சிகரமான பரிசுகளை அளிப்பதாகவும், விளம்பரம் செய்து, அதன்மூலம் பெரும் தொகையை வைப்பீடாகப் பெற்றுக்கொண்டு விளம்பரப்படுத்தியவாறு வைப்பீட்டாளர்களின் முதலீட்டையும், அதற்கான வட்டித் தொகையையும் அவர்களுக்கு திருப்பித் தராமல் நிதி நிறுவனங்களை மூடிவிட்டு அந்த அதிபர்கள் தலைமறைவாகி விட்டார்கள். இதையெல்லாம் இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தத் தகவல்களையெல்லாம் முற்றாக அறிந்து உடனடியாகச் செயல்படத் தொடங்கி அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, தனி நீதிபதிகளைக் கொண்டு தனி நீதிமன்றங்களைக் கொண்டு அவர்களையெல்லாம் விசாரித்து, உடனடியாக, இழந்தவர்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களைத் திருப்பித் தரவேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு சிறப்பு நீதிமன்றம் 19.1.1998 முதல் செயல்படத் தொடங்கியிருக்கின்றது. மேற்சொன்ன சட்டம் தொடர்பான பிற மாவட்டங்களிலுள்ள எல்லா வழக்குகளையும் சென்னையிலே இயங்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய 14.2.1998 அன்று அை அனைத்து மாவட்ட நீதிபதிகளையும் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது எனவே, வழக்குகள் மாற்றப்பட்டு உடனடியாக சிறப்பு நீதிமன்றம் தன்னுடைய விசாரணையைத் தொடங்கும் என்றும். தவறு செய்தவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றும் இந்த மாமன்றத்திற்கு நான் உறுதி கூறுகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)