உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

383

மாநகரத்திற்கும் அனுப்பியிருக்கிறோம் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து, எல்லா மாவட்டங்களிலுமுள்ள போலீஸ் அதிகாரிகள் ஆங்காங்குள்ள குண்டுகளை எல்லாம் சோதித்து, சேகரித்து, அதனுடைய அதனுடைய கணக்கு கணக்கு விவரங்களை எல்லாம் அனுப்பி, வைத்திருந்தவர்களை எல்லாம் கைது செய்து. அவர்கள் மீதெல்லாம் வழக்குப் போட்டிருக்கிறார்கள். ஆனால், கோவைக்குப் பல கடிதங்கள் எழுதியும்கூட, பல தாக்கீதுகள் அனுப்பியும்கூட, தொலைபேசியிலே நானே நேரிலே பேசியும் கூட கோவையிலே உள்ள அதிகாரி தவறிப்போய் அப்படி குண்டு எதுவும் இல்லை என்கின்ற செய்தியை எழுத்துபூர்வமாகத் தருகிறார் என்றால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? அங்கேயும் முதலமைச்சரே போய், ஏன் குண்டைத் தேடிப் பார்க்கவில்லை, முதலிலேயே உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது என்று கேட்டால். அது வேண்டும் என்றே அரசியல் நடத்துகின்ற பாங்கே தவிர வேறு அல்ல. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான், நம்முடைய நண்பர் தாமரைக்கனி அவர்கள் இங்கே குறிப்பிட்ட அந்த ஆயிஷா பற்றிய தகவல், மேலும் விவரங்கள் இருந்தால் அவர் அதைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்டால், ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், ஆயிஷாவை விரைவிலே பிடிப்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளிலும் நம்முடைய காவல் துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசு அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியது பற்றிய முடிவுகளை, ஒருசில விளக்கங்களை நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்ட காரணத்தால், அளிக்க விரும்புகின்றேன். நான் அரசு அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள், அவர்களுடைய பிரதிநிதிகளை எல்லாம் தனித்தனியாகவும், ஒன்றாகவும் அழைத்து வைத்து, 2 நாள், கிட்டத்தட்ட 8 மணி நேரம் அவர் களோடு பேசி, அவர்கள் ஏற்றுக்கொண்ட வகையிலேதான் இந்த அவையில் நான் அந்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையிலே செய்திருக்கிறேன். நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டமன்றத் தலைவர் கணேசன்