கலைஞரின் சட்டமன்ற உரைகள்
385
1989 ஆம் ஆண்டிலே இந்த அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய அரசைப்போல மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படத் தொடங்கியது. இந்த அரசு தான், தமிழகத்திலே முதன் முதலாக அந்தப் பணியைச் செய்தது என்பதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதற்குப் பிறகு இப்பொழுது இந்த ஊதியக் குழுவினுடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதிலும் மாநில அரசு மத்திய அரசைப் பின்பற்றும் என்ற உறுதிமொழியை இந்த அவையிலே நான் அறிவித்திருந்தேன். அதற்கு ஏற்ப, மத்திய அரசின் ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கும்போது ஒருசில பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்களுக்கு தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் ஊதியம், மத்திய
ய
அரசு
அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகம் என்பதை மறந்து விடக்கூடாது. அது அவர்களுக்கே தெரியும் சில ஊதியங்கள் மத்திய அரசு வழங்குகின்ற ஊதியத்தைவிட மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே, மத்திய அரசு அலுவலர் ஊதிய விகிதத்தை அப்படியே நாமும் கடைப்பிடித்தால், அவர்கள் தற்போது பெற்றுக் கொண்டிருக்கிற ஊதியத்தைவிடக் குறைவாகப் பெறக்கூடிய நிலைமை ஏற்படும். மத்திய அரசு ஊதியத்தையே தருகிறோம் என்று சொன்னால், இப்போது அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஊதியத்தைவிடக் குறைவாகத்தான் பெறுவார்கள்.
இன்னும் ஒன்று. மத்திய அரசு ஊதியங்களை மாற்றியமைக்கும் போது ஒருசில பதவிகளுக்கு உயர் அளவு ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது மத்திய அரசில். அதை இங்கே பின்பற்றினால் இங்கே ஏற்கெனவே இருக்கின்ற சமன்பாடு குந்தகப்படும். அதற்கு ஒரு குறை ஏற்பட்டு விட்டதாக மற்ற அரசு அலுவலர்கள் போர்க்கொடி தூக்குவார்கள். எனவேதான் இவற்றை எல்லாம் குறித்து அலுவலர்களிடமும், ஆசிரியர்களிடமும் அந்தப் பிரதிநிதி களிடமும் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டது. இதை யெல்லாம் கருத்தில் கொண்டுதான், ஊதிய விகிதங்களை மாற்றியமைக்கும் போது Scale to Scale, Pay Scale to Pay Scale