கலைஞரின் சட்டமன்ற உரைகள்
387
அடுத்த ஆண்டு 20 சதவீதம், 480 கோடி ரூபாய், என்று கொடுப்பது; எவ்வளவு சாமர்த்தியமாக இந்த நிதிநிலையைக் கையாண்டிருக்கிறார்கள் என்று மாண்புமிகு உறுப்பினர் திரு.சுப்பராயன் அவர்கள் சொன்னார்களே. இதுதான் சாமர்த்தியம் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித்தான் செய்ய முடிந்தது. எப்படி அந்த ஊதியத்தைப் பெறுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை ஒரு சில உதாரணங்கள் மூலம் மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
PI
அலுவலக உதவியாளர்கள், அவர்களுடைய அடிப் படை ஊதியம் இதுவரை ரூ.750 முதல் ரூ.945 என்ற அளவில் இருந்தது. இனிமேல் அந்த அடிப்படை ஊதியம் ரூ. ரூ.2550 முதல் ரூ. 3200 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, ஓர் அலுவலக உதவியாளர் இதுவரை துவக்கத்திலே 2550 ரூபாய் ஒட்டுமொத்தமாக, அகவிலைப்படியும் சேர்த்து ஒட்டுமொத்த ஊதியமாக வாங்கிக்கொண்டிருந்ததற்கு மாறாக, இனி 3222 ரூபாய் ஊதியமாக அதாவது 642 ரூபாய் அதிகமாக பெறலாம். ஆயிரம் என்று சொன்ன உடனே எல்லோரும் ஆஹா என்றார்கள். 642 ரூபாய் அதிகமாகப் பெறலாம். இதுவே அதிகத் தொகைதான். நம்மைப் பொறுத்தவரையில். அவர்களுக்குச் சிறிய தொகையாக இருக்கலாம். கொடுப்பவர்களுக்கு இது பெரிய தொகை. அந்த அலுவலக ஊழியரே உச்ச நிலையில் இதுவரையிலே 3160 ரூபாய் ஒட்டுமொத்தமாக ஊதியம் பெற்று வந்ததற்கு மாறாக, இனி 4021 ரூபாய். அதாவது. 861 ரூபாய் அதிகமாகப் னி பெறுவார்கள். ஃபர்ஸ்ட் கிரேடு கான்ஸ்டபிள் -முதல் நிலைக் காவலர்களுடைய அடிப்படை ஊதியம் இதுவரை இருந்தது, 950 இலேயிருந்து 1,500 வரையில். இவர்களுக்குத் திருத்தப்பட்ட ஊதிய விகிதம். அகவிலைப் படியெல்லாம் சேர்த்துத் திருத்தப்பட்ட ஊதிய விகிதம்...
மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் முன் அனுமதியோடு பேரவையின் அலுவல் நேரம் நீட்டிக்கப் பெறுகிறது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இவர் களுக்குத் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 3050லிருந்து 4590.