உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

389

இதே பதவியிலே இருப்பவர்களுக்கு உச்சகட்டத்தில் இதுவரை 6676 ரூபாய் பெற்றதற்கு மாறாக 7680 ரூபாய், அதாவது 1004 ரூபாய் மாதம் ஒன்றுக்கு அதிகமாகப் பெறுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், தலைமைச் செயலக முதுநிலைத் தட்டச்சர் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஊதியம் விகிதம் 1400லேயிருந்து 2600. தற்போது திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 5000-த்திலிருந்து 7800. மொத்த ஊதியமாக இவர்கள் மாதம் ஒன்றுக்கு 4613 ரூபாய் பெற்று வந்ததற்கு மாறாக 6350 ரூபாய், அதாவது 1737 ரூபாய் அதிகமாகப் பெறுவார்கள்.

கிராம உதவியாளர்கள் போன்றவர்கள் ஊதியமும் குறைந்தபட்சம் 40 சதவீதம் ஊதிய உயர்வு என்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது

உதாரணமாக, கிராம உதவியாளர்கள் ஊதிய விகிதம் தற்போது 600லேயிருந்து 750 என்பதிலேயிருந்து ரூபாய் 1800 முதல் 2240 என்று மாற்றியமைக்கப்படும். அதாவது, கிராம உதவியாளர்கள் மாநகரத்திலே பணிபுரிபவர்கள் கூடுதலாக மாதம் ரூபாய் 397-ம், கிராமத்திலே பணியாற்றுபவர்கள் கூடுதலாக மாதம் 252-ம் பெறுவார்கள்.

பகுதிநேர நிரந்தரப் பணியாளர்களான சத்துணவு அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தற்போது ரூபாய் 200 முதல் 400 என்ற ஊதிய விகிதத்தில் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருத்திய ஊதிய விகிதமாக ரூபாய் 600 முதல் 1100 வரை வழங்கப்படும்.

இதிலேயிருக்கின்ற குறைபாடுகளையெல்லாம் ஏதாவது இருக்குமேயானால், முரண்பாடுகள், குறைபாடுகள் இருக்குமேயானால், அதற்காக One Man Commission என்ற ஒன்று அமைக்கப்படுகிறது. அந்தக் கமிஷன் மூலமாகக் குறைபாடுகளைச் சொல்லி மேலும் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் என்ற உறுதியையும் இந்த அவைக்கும். அரசு ஊழியர்களுக்கும் நான் வழங்குகின்றேன். கயல் இங்கக்கு