உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

நிதிநிலை அறிக்கை மீது

செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இப்போதுதான் பொட்டு விஷயம் வருகிறது. (சிரிப்பு) நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு, பொதுவாக விமர்சித்த கட்சித் தலைவர்கள் சிலரும் மாண்புமிகு உறுப்பினர்கள் சிலரும் விவசாயிகள் பிரச்சினை பற்றிச் சொல்லவே இல்லை என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இந்த 49 பக்க நிதிநிலை அறிக்கையில் ஏறத்தாழ 25 பக்கமாவது விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டுதான் பல திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவிலேயே முதன்முதலாக லவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்குகின்ற ஒரே ஒரு ஆட்சி, அதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். (மேசையைத் தட்டும் ஒலி) அதையெல்லாம் சொல்லி விட்டு, அதையெல்லாம் செய்தவர், இதைச் செய்யவில்லையே என்று சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகள் பற்றி ஒன்றுமே இல்லை, விவசாயிகளைக் கைவிட்டுவிட்டார் என்று எல்லோரும் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

,

மத்திய அரசு நிர்ணயித்துள்ள நெல் விலைக்கு மேல் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்காத பணம் குவிண்டால் ஒன்றுக்கு 35 ரூபாய். அதை போனஸாகக் கொடுக்கக்கூடாது. திரு. ஜகஜீவன்ராம் உணவு அமைச்சராக இருந்தபோது, நான் முதலமைச்சராக இருந்தபோது கேட்டேன், அதிக விலை கொடுக்க வேண்டுமென்று, கொடுப்பதற்கு இடமேயில்லை என்று கண்டிப்பாகச் சொன்னார். இல்லை. கட்டாயம் தமிழகத்திற்குக் கொடுத்தே தீரவேண்டுமென்று சொன்ன போது, அவர் வேறு வழி சொல்லிக் கொடுத்தார். அந்த வழிதான் 'நீ போனஸாகக் கொடுப்பதை, வண்டிச் சத்தம், வாடகை என்று சொல்லி, கொஞ்சம் அதிகத் தொகையை உயர்த்திக் கொடு, பிரச்சினை வராது' என்று சொன்னார். அப்பொழுது ஆரம்பித்ததுதான் இது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, இன்றைக்கு குவிண்டால் ஒன்றுக்கு