உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

405

சென்னை மாநகரத்தை ஏன் அழகாக வைத்திருக்கக் கூடாது, சிங்காரச் சென்னை, சிங்காரச் சென்னை என்று மேயர் கூறிக் கொண்டேயிருக்கிறாரே, ஏனோ சிங்காரச் சென்னை இன்னும் உருவாகவில்லை என்று கேட்பதும் எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, தோழமைக் கட்சிகளும்தான் கேட்கிறார்கள். ஆனால், அதற்காக, கூவத்தையோ அல்லது பக்கிங்ஹாம் கால்வாயையோ, ஓட்டேரி நல்லாவையோ அழகுபடுத்த வேண்டும். ஆழப்படுத்த வேண்டும், அகலப்படுத்த வேண்டும், சென்னையை நாகரிகம் மிகுந்த நகரமாக மாத்திரமல்ல. சுகாதாரம் மிகுந்த நகரமாக, கொசுக்கடி போன்ற தொற்று நோயைப் பரப்பக்கூடிய கிருமிகள் உற்பத்தி ஆகாத இட இடமாக மாற்ற வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு, அதற்காக இப்போது அங்கு இருக்கின்ற குடிசைகளையெல்லாம் அகற்றி, அவர்களுக்கு வேறு மாற்று இடம் தருகின்ற முயற்சியிலே மாநகராட்சி மன்றம் ஈடுபடுகிற நேரத்திலும் மாநகராட்சிக்குத் துணையாக மாநில அரசு இருக்கின்ற நேரத்திலும்கூட, ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் அங்கு வாழுகின்ற குடிசைவாசிகளை அழைத்துக் கொண்டு ஒரு ஊர்வலம் விடுகிறார்கள் என்றால், நான் அங்கு இருக்கின்ற குடிசைவாசிகளுக்கு எதிரானவன் அல்ல. அவர்களுக்கு மாற்று இடம் தரவேண்டும், அவர்கள் நல்லமுறையிலே வாழவேண்டும் என்கின்ற ற எண்ணம்

டையவர்கள்தான் நாம். ஆனாலும் நாலாயிரம், ஐந்தாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு வருகின்ற காரணத்தினாலே அந்த அழகுபடுத்துகின்ற காரியத்தை அரசோ அல்லது மாநகராட்சி மன்றமோ செய்யலாமா, செய்ய வேண்டாமா என்கின்ற மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடுகிறது. மத்திய சர்க்காரால் மாத்திரமல்ல, மூச்சுத் திணறல் தோழமைக் கட்சிகளாலும் எனக் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

கவர்ச்சித் திட்டங்களைப் பற்றியெல்லாம் அவர் சொல்லும்போது தொங்கு சதை என்று குறிப்பிட்டார். அவருக்கே உரிய சில வார்த்தைகள் உண்டு. இந்த அவையிலே எனக்கோ அல்லது பேராசிரியருக்கோ, மற்றவர்களுக்கோகூட