உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

நிதிநிலை அறிக்கை மீது

என்பதையும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். 80 இலட்சம் பேருக்கு வேட்டியும், 70 இலட்சம் பேருக்குச் சேலையும் இப்போது தரப்படுகின்றது என்றால் அந்தத் திட்டத்தை 1989லே இந்த அரசு அறிவித்தது.

1989லே ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவாக மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம். ஆண்டு வருமானம் ரூபாய் 12 ஆயிரத்திற்குள் இருந்தால் என்று தொடங்கி, 1997இல் 24 ஆயிரம் ரூபாய் என்று அந்த வருமான வரம்பை உயர்த்தி நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் இந்த அரசுதான்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியினுடைய நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டம் 1989ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டு, நிறைவேற்றிச் செயற்படுத்தியதும் இந்த அரசுதான்.

மகளிருக்காக அரும்பாடுப்பட்ட மூவலூர் மூதாட்டியார் நினைவாக திருமண உதவித் திட்டம் 1989லேதான் 5 ஆயிரம் ரூபாய் என்று தொடங்கி 1996ல் 10 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு 128 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த மூன்று ஆண்டுகளிலே மாத்திரம் 1 இலட்சத்து 28 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த ஆண்டிலே அதற்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் 1989ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பிலேயிருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டம்.

1989லேதான் அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு எல்லாம் கட்சிப் பணியிலேயே ஒதுக்கீடு என்கிறார்கள். அன்றைக்கு அரசுப் பணியிலேயே 30 விழுக்காடு ஒதுக்கீடு செய்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

1989லேதான் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடங்கப்பட்டது. அதுவரையிலே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என்று இருந்தது: தாழ்த்தப்பட்டோர் நலத்துறை