416
நிதிநிலை அறிக்கை மீது
நமக்குத் தெரியாமல் எங்கேயோ ஒரு மூலையில், ஒரு கோடியில் யாரோ ஒருவர், அவர்களாகத் தருகிற 5 ரூபாயோ, 10 ரூபாயோ வாங்குவதைத் தடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அவ்வளவு நீளத்திற்கு இந்தக் கையால் ஆகாதவர்களுக்குக் கையும் கிடையாது அதையெல்லாம் கண்டுபிடித்துத் தடுப்பதற்குக் கையும் கிடையாது.
1991 - 1996இல் 8,450 இடைநிலை ஆசிரியர்கள். இந்த 1991லேயிருந்து 5 வருஷம், இடைநிலை ஆசிரியர்கள் கடந்த கால ஆட்சியிலே 8,450 பேர்தான் நியமிக்கப் பட்டார்கள். அதில் எத்தனை கோடி ரூபாய் ஊழலாக, இலஞ்சமாகப் புரண்டது என்பது மாண்புமிகு உறுப்பினர்களுக் கெல்லாம் மிக நன்றாகத் தெரியும். ஆனால், 1996க்குப் பிறகு இந்த 3 ஆண்டுக் காலத்தில் வேலைவாய்ப்புப் பதிவக முன்னுரிமைப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 ஆண்டுக் காலத்திலே கடந்த ஆட்சியிலே - ஜெயலலிதா ஆட்சியிலே - 8,450 பேர் இந்த 3 ஆண்டுக் காலத்திலே 31,108 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)
1989இலே நெல்லையிலே மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்; சென்னையிலே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்; சென்னையில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம்
1989இல் 8ஆம் வகுப்பு வரை வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை. அது இப்பொழுது விரிவுபடுத்தப்பட்டு 12ஆம் வகுப்பு வரை இலவசப் பேருந்து பயணச் சலுகை.
1989-90இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி. 1989-90இல் மிகப் பிற்படுத்தப் பட்டவர்களுக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
1990ஆம் ஆண்டில் மலைவாழ் மக்களுக்கு ஒரு விழுக்காடு. தனி ஒதுக்கீடு Reservationல், 19 விழுக்காடு ஆக அன்று இருந்ததை 18 விழுக்காடு ஆதிதிராவிடர்களுக்கு