கலைஞரின் சட்டமன்ற உரைகள்
431
பரிமாறிக் கொண்டிருக்கிறோம். நானும், நிதித் துறைச் செயலாளர் அவர்களிடத்திலே இதைப்பற்றி விளக்கம் கேட்கிறேன். அந்த விளக்கத்தை அவருக்குச் சொல்கிறேன், அதிலே அவர் ஆறுதல் அடைகிறார். ஒத்துக்கொள்கிறார். இதற்காகத்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்த பட்ஜெட் என்றால் என்ன, திட்டம் என்றால் என்ன, டெல்லிக்குச் செல்கிறோம், 5 ஆயிரம் கோடிக்குத் திட்ட ஒதுக்கீட்டிற்கு டெல்லி தந்துவிட்டது என்றதும், உடனே ஆஹா வாங்கி 5 ஆயிரம் கோடி கையிலே நான் வந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு பாராட்டுகிறார்கள். அது அல்ல. 5 ஆயிரம் கோடி செலவு செய்து கொள்ள ஒப்புதல்தான், 5 ஆயிரம் கோடி தந்துவிடுவதில்லை. அதற்கு என்ன resource இருக்கிறது, என்ன அடிப்படையிருக்கிறது, அவர்களிடத்திலே நிதி ஆதாரம் இருக்கிறது என்பதைக் கேட்டு, அவர்கள் அதற்குமேல் ஒதுக்குகின்ற மானியங்கள், கடன் தொகை இவையெல்லாம் சேர்த்துத்தான் 5 ஆயிரம் கோடி. முழுமையாக 5 ஆயிரம் கோடி அல்ல அது. அதைப்போல பல நுணுக்கங்கள் பட்ஜெட் விவகாரத்திலே இருக்கிற காரணத்தால், சட்டமன்றத்திலே உள்ள, அக்கறை உள்ள உறுப்பினர்களுக்கு, பட்ஜெட்டை படித்துவிட்டுப் பேச வேண்டும், பட்ஜெட்டிலே இருக்கின்ற விவரங்களைப் புரிந்துகொண்டு பேச வேண்டும், நாமும் ஒரு காலத்திலே ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடும்.
அப்போது வருகிற நேரத்தில் அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். எனவே, நாம் இப்போதே நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்கின்ற அந்த அக்கறையோடு இருக்கின்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக் கெல்லாம் இதற்காக ஒரு பயிற்சி நடத்த வேண்டுமென்ற விருப்பத்தை நான் ஏற்கெனவே வெளியிட்டு இருக்கிறேன். அதை எப்பொழுது வைத்துக்கொள்ளலாம் என்று நண்பர் சொக்கரும் மற்றவர்களும் என்னிடத்திலே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினம்கூட நிதித்துறைச் சயலாளரிடத்திலே அது பற்றிப் பேசி இருக்கிறேன். யார் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவர்களுடைய பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு எந்தத் தேதியிலே அந்த