442
நிதிநிலை அறிக்கை மீது
இங்கே இறக்குமதி செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் இரப்பர் விலை மிகவும் குறைந்துவிட்டது. நாம் அந்த இறக்குமதியை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்ததன் காரணமாக இப்போது இரப்பர் இறக்குமதி தடை செய்யப்பட்டிருக் கின்றது. என்றாலும்கூட, கேரள மாநிலத்தில் State Trading Cor- poration தன் கையிருப்பான 50 ஆயிரம் டன் இரப்பரை, சந்தையிலே மலிவாக விற்கத் தொடங்கிவிட்ட காரணத்தால், இறக்குமதியைத் தடை செய்தும்கூட இங்கே உள்ள இரப்பர் விலை அதிகரிக்கவில்லை என்ற செய்தியையும் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.
கன்னியாகுமரி மாவட்டத்திலே இரப்பர் தொழில் பூங்கா அமைக்க நான் முன் நின்று பணியாற்றுவேன் என்று இதே அவையிலே மணி அவர்களுக்கு உறுதியளித்திருக்கின்றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரப்பர் தொழிற் பூங்கா அமைக்க, தோவாளை வட்டம் செண்பகராமன்புதூரில் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரப்பர் தொழிற் பூங்காவிற்கான சாத்தியக் கூறு அறிக்கை கோட்டயத்திலே உள்ள மத்திய அரசு நிறுவனமான இரப்பர் கழகத்தால் தயார் செய்யப்பட்டு, அது வெகு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் படவிருக்கும் இந்த இரப்பர் தொழிற் பூங்காவில் சுமார் 100 இரப்பர் தொழிற்சாலைகள் அமைய உள்ளன என்பதை நான் மணி அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். இது இரண்டு கட்டத்திலே நிறைவேற்றப்படவுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்தத் தொழிற்பூங்கா விற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இரப்பர் தொழிற் பூங்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் அமைய உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அவையிலே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கைத்தறியாளர்களுடைய நிலையைப் பற்றி இங்கே சொன்னார்கள். அதிலும், நம்முடைய ஞானசேகரன் அவர்கள், அரிச்சந்திரா மயான காண்டத்திலே சந்திரமதி புலம்புவதைப்