உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

உடனடியாக

நின்றுவிடுவதில்லை; (மேசையைத் தட்டும் ஒலி).

நிதிநிலை அறிக்கை மீது

அமலுக்கு வரும்.

காமராஜர் மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 27.09.1996ஆம் நாளிட்ட ஆணையின்படி, கடற்கரைப் பாதுகாப்பு விதிகளின்படி, கடற்கரையிலே இருந்து 500 மீட்டர் தொலைவுவரை கட்டடம் கட்டுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாகும். எனவே, மத்திய அரசின் அனுமதி பெற தொடர்புடைய துறையிடமிருந்து விவரங்களைப் பெற்று மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத் துறைக்கு 7-8-1998 அன்று அனுப்பப்பட்டது. சில விஷயங்களில் மத்திய அரசினுடைய அனுமதிப் பெற வேண்டியிருக்கும்

நான் 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, இந்தக் கோட்டை எப்படி இருந்தது என்று ஒருமுறை நீங்கள் மனக் கண்ணால் பார்த்துக் கொள்ளலாம். கோட்டை முழுவதும் கள்ளிக் காடு, பாம்பு, பல்லி என்கின்ற அளவுக்குப் பயங்கர மான காடு முளைத்திருந்தது. எதிரே இப்படி சோலைவனமாக இல்லை. அதிகாரிகளைக் கூப்பிட்டு, 'இதையெல்லாம் சரி செய்யுங்கள்; இந்த மரங்களை எல்லாம் வெட்டுங்கள்; புதர்களையெல்லாம் அழியுங்கள்' என்றேன். அதிகாரிகள் கை பிசைந்து நின்றார்கள். என்ன என்று கேட்டேன். இதெல்லாம் உங்கள் உத்தரவிலே இல்லை; மத்திய சர்க்காரைக் கேட்க வேண்டும். இராவணுவத்தைக் கேட்க வேண்டும் என்றார்கள். உடனே மத்திய சர்க்காருக்கு எழுதினேன். அப்போது, திரு. கிருஷ்ணா Minister of State for Defence ஆக இருந்தார். அவர் உடனடியாக எனக்குக் கடிதம் எழுதி, நான் வந்து நேரடியாகப் பார்த்துவிட்டு உத்தரவு போடுகிறேன் என்றார். அவர் வந்து பார்த்துவிட்டு போய், 3 மாதங்கள் கழித்து, இந்தப் புதர்களை எல்லாம் அழிக்கலாம் என்று அரசுக்கு உத்தரவு கொடுத்தார். மாநில சுயாட்சி கேட்பதற்கு, வந்த ஆத்திரத்திலே அது ஒரு காரணம். (சிரிப்பு). இருக்கிற புதர்களையும், கள்ளிக் காட்டையும் அழிப்பதற்கே மத்திய சர்க்காரிடத்திலே உத்தரவு கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. வனத் துறைக்கு 7.8.1998 அன்று அனுப்பப்பட்டது. மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல்