உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

455

விவசாயிகளுக்கு அரசு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் 1996-97 ஆம் ஆண்டில் 6,678 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு, அதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,321 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 1997-98 ஆம் ஆண்டில் 7,196 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு 1,580 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 7,586 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் 58 காசு என்ற வீதத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,945.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஏற்பட்ட மொத்த இழப்பு 4,747 கோடி ரூபாய் என்பதை நான் ஞாபகப்படுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் விதிக்கப்படும் தண்ணீர்த் தீர்வை நாட்டிலேயே மிகவும் குறைவானது ஆகும். இது 1962ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தப்படவே இல்லை. பெரிய, நடுத்தர மற்றும் சிறுபாசனங்கள் மூலம் அரசுக்கு இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் மாத்திரமே வரவு கிடைக்கும். ஆனால், இந்தப் பாசனத் திட்டங்களைப் பராமரிக்கும் செலவு 37 கோடி ரூபாய். 37 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு, 10 கோடி ரூபாய்தான் வரியாகப் பெறுகிறோம். இந்த வகையிலும் விவசாயிகள்தான் பயன் அடைகின்றார்கள். இது தவிர, து ஆண்டில் உணவு தானிய உற்பத்தி, தரிசு நில மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரூபாய் 48 கோடி உதவித் தொகையாக வழங்கி, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கிராமங்களுக்கு இணைப்புச் சாலை, ஊரகக் குடிநீர்த் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் போன்றவை எல்லாம் கிராமங்களிலே உள்ள விவசாயி களுடைய நலன் கருதி தீட்டப்படும் திட்டங்கள்தான் தமிழகத்திலே 1993லேயிருந்து 1995 வரை, 6.6 விழுக்காடாக உயர்ந்த விவசாயத் தொழிலாளர்களுடைய கூலி, 1996 லேயிருந்து 1998 வரை 26.8 விழுக்காடாக விவசாயிகளுடைய கூலி உயர்ந்துள்ளது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலைப்புள்ளிக் குறியீடு (Price Index), அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைப்புள்ளி