458
நிதிநிலை அறிக்கை மீது
துறை
எழுதிக் கொடுத்திருக்கிறார். பொதுப்பணித் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். உலக வங்கி நிதியிலிருந்து இப்பணிக்குப் போதிய நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வரிகளைப்பற்றி நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். மேலும் இந்த வரி மாற்றம் பற்றிய சில அறிவிப்புகளை இங்கே வழங்க நான் முன்வருகின்றேன்.
தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் பகுதி 'டி வரிசை எண் 67லிலே உள்ள, எந்த அட்டவணையிலும் இடம் பெறாத பிற பொருட்கள் அவற்றுக்கு ஈடான பொருட்கள் இடம் பெறும் பகுதிகள் சேர்க்கப்படும் என்று அறிவித்திருந்தேன். இதுபற்றி சிறு விளக்கம் தெரிவிக்க வேண்டுமென்பதற்காக, என்னென்ன இனங்களுக்கு 11 விழுக்காடு வரியிலேயிருந்து வரி விலக்கு. வரி குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் உதாரணங்களோடு எடுத்துரைக்க விரும்புகிறேன்.
பருத்தியினால் செய்யப்பட்ட கயிறு, பிரம்பினால் செய்யப்பட்ட தட்டி, கூடை மற்றும் முறம், கரும்புச் சக்கை போன்ற பொருள்களுக்கு விற்பனை வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அகர்பத்தி, வெப்ப அளவி, லேக்டோஸ் IP/BPஆக காலி Gas சிலிண்டர். அனைத்து வகை கம்பித் தடுப்புகள் (Grills) காகித நாப்கின்கள், சாவிக் கொத்துக்கள், போட்டோ ஆல்பங்கள், இரும்பு அல்லாத மற்றும் கலப்பு உலோகங்களின் கழிவுகள், கண்ணாடிப் புட்டிகளில், சாஷேய்களில், கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், Distilled Water, செயற்கை எலும்புகள், எலும்பு சிமெண்டு, Abdominal Belt, Knee Cap போன்ற பொருள்களுக்கு விற்பனை வரி 11 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).
8
பழுதடைந்த (Condemned) கோணிப் பைகள், அனைத்து வகை கொசு வலைகள், நாப்தலின் உருண்டைகள், சணலினால் செய்யப்பட்ட மேஜை விரிப்பு, மிதியடி, கைவினைப் பொருட்கள், உடற்பயிற்சிக்கான பொருள்கள் மற்றும் உபகரணங்கள், குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுச்