உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

நிதிநிலை அறிக்கை மீது

வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பேசிக்கொண்டு இருக்கும் போது இந்தப் புத்திசாலித்தனம் சுப்பராயன் அவர்களுக்கு வந்து இருக்குமேயானால் நான் மகிழ்ந்து இருப்பேன் (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) இருந்தாலும் தாமதமாக வந்த புத்திசாலித்தனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி)

நம்முடைய வரவு-செலவுத் திட்ட அறிக்கை வெளிவந்தவுடனேயே இதைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லும்போது, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகைக்காரர்களிடத்தில்...

திரு. என்.ஆர். அழகராஜா: Point of clarification, Sir.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான் அனுமதி கொடுக்கவில்லை. நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடு) திரு அப்பாவு, உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால் நிச்சயம் வெளியேற்றுவேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: “நிதிநிலை அறிக்கை, ஏற்கெனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிற எந்தப் பயனும் இல்லாத நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், உழவர் சந்தை, சமத்துவபுரம் ஆகிய திட்டங்களைப் பற்றித் தெரிவிப்பதாக இருக்கிறதே தவிர, புதிதாக எந்தத் திட்டமும் அறிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த அறிக்கை மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஒரு திட்டமும் இல்லாத, ஒப்பு சப்பு இல்லாத நிதிநிலை அறிக்கை" என்று பேட்டி கொடுக்கிறபோது நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். எந்தப் பயனும் நமக்கு நாமே திட்டத்தால், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தால், உழவர் சந்தையால், சமத்துவபுரத்தால் இல்லை என்று கூறியிருப்பதுதான் எனக்கு வியப்பூட்டுகிற பகுதிகளாகும். சமத்துவபுரத்தால் எந்தப் பயனும் இல்லை என்று இப்போது சொல்வதும், இதே அவையிலே மாண்புமிகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் புகழ்ந்து போற்றப்பட்ட, பேசப்பட்ட நமக்குநாமே திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று சொல்வதும், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை எங்கள் ஊருக்கு இன்னும் விஸ்தரித்துக்