உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

நிதிநிலை அறிக்கை மீது

மேம்பாட்டுக்கென தனியாக ஒரு துறை அமைப்பு; ஆதரவற்ற முதியோர், மீனவர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்றோர் போன்ற பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் 150 ரூபாய் என்பது 200 ரூபாயாக உயர்வு; அரசுப் புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகள் வீடு கட்டி அனுபவித்து வருபவர்களுக்கு அந்த இடத்தை உரிமையாக்கி வீட்டுமனை பட்டா வழங்குதல்: 6ஆம் வகுப்பிலே பயிலும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு ஏற்கெனவே இந்த அரசு வழங்குவது போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் 100 ரூபாய் வழங்கும் திட்டம்.

6

அதேபோல 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 60 ஆயிரம் மாணவியருக்கு ஓராண்டுக்கு 500 ரூபாய் வீதம் ஊக்கத் தொகை: ஊனமுற்றோர்களுடைய வேலைவாய்ப்பை அதிகரித்திட 6 பயிற்சி மையங்கள் அமைத்து 300 பேருக்குக் கணினிப் பயிற்சி இலவசமாக அளித்தல்; மேலும் 6 மையங்களில் ஆய்வுக்கூடப் பரிசோதனை, X-ray பரிசோதனை, E.C.G., E.E.G., இதர நவீனப் பரிசோதனைகளை மேற்கொள்ள 300 பேருக்குப் பயிற்சி; சமூக சீர்திருத்தத் துறை மூலமாக மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை மீட்க பிரச்சாரம்

செய்திட முடிவு; 60 வயதிற்குள் இறக்க நேரிடும்

நெசவாளர்கள் குடும்ப ஓய்வு நிதி 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு. 60 வயதைத் தாண்டிய நெசவாளர்கள் பயன்பெற மாத ஓய்வூதியத் தொகை 150 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்வு; பத்திரிகையாளர்களுடைய ஓய்வூதியம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்வு; பத்திரிகையாளர் பணிபுரியும்போது இறந்துவிட்டால் வழங்கப்படும் நிதி 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்வு; மாவட்டத் தலைமையிடங்களில் அரசு அலுவலர்களுக்கு 2144 வாடகைக் குடியிருப்புகள்; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைமையிடங்களிலும், திருப்பூர் போன்ற நகரங்களிலும் புதிதாக சார்பு நகரங்கள் (Satellite Towns) உருவாக்க முடிவு; சத்துணவு பெறும் மாணவர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட 18 பைசா என்பது இனி 23 பைசாவாக உயர்த்த