உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

,

நிதிநிலை அறிக்கை மீது

தூர் வாருவதற்கு இந்த ஆண்டும் 50 கோடி ரூபாய்; ஆலந்தூர் மாடல் பாதாள சாக்கடை வசதித் திட்டத்தைப் பரவலாக்கத் திட்டம்; 6 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்; 4 ஆயிரம் காவல் துறையினர், தீயணைப்புப் பணியாளர்கள் நியமனம்; மாநில அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை; நான்கு மாவட்டங்களில் ஊரகத் தூய்மை இயக்கம்; சொந்தக் கிராமங்களில் கல்விக்கூடங்கள், மருத்துவமனை அமைக்க முன்வருபவர்கள் பெயர் சூட்ட ஒப்புதல்; மாவட்டத் திட்டக் குழுக்கள் இனி மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையிலே இயங்க முடிவு; தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள்; கன்னியாகுமரியில் இரப்பர் தொழிற் பூங்கா. அபிஷேகப்பட்டியில் கால்நடைப் பண்ணையைச் சீர்திருத்தி மேம்பாடு செய்தல்; மதுரை மாநகரில் உயர்நீதிமன்றக் கிளை; வணிகர்களுக்கான பல்வேறு சலுகைகள் வரிக் குறைப்பு, வரி நீக்கம்; திரைப்படத் துறைக்கு வரிச் சலுகைகள்: இவ்வளவும் அடங்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கை எதுவுமே இல்லாதது, ஒன்றுமே இல்லாதது என்று பேசப்பட்டதுதான் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.

நான் முதலிலே குறிப்பிட்டதைப் போல, நம்முடைய அருமை நண்பர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றக் கொறடா ஞானசேகரன் அவர்கள், அவர்களுடைய உரையின் தொடக்கத்தில் ஒன்றைச் சொன்னார்கள். வரி இல்லாத பட்ஜெட், வரி இல்லாத பட்ஜெட் என்கிறீர்களே, இதோ, நான், இன்றைய முதலமைச்சர் அன்று பேசிய பேச்சைப் படித்துக் காட்டுகிறேன் என்று, என்னுடைய பழைய பேச்சை இங்கே படித்துக் காட்டினார். அதற்கு நான் உதவியதற்காக எனக்கு நானே நன்றி கூறிக்கொள்கிறேன். 4.3.1966ல் நான் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டினார்.

,

அந்த மேற்கோளில் முழுப் பேச்சையும் படித்துக்

காட்டியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அதை நான் படித்துக் காட்டுகிறேன். (சிரிப்பு) அன்று அவர்கள் மேற்கோள் காட்டிய என்னுடைய பேச்சில்.

"வரவு செலவுத் திட்ட அறிக்கையிலே வரி போட்டால் அது பெரும் பிரச்சினை என எண்ணி, மிகத் தந்திரமாக, கடந்த