உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

நிதிநிலை அறிக்கை மீது

வரி விதித்தது என்று பார்த்தால், 1996-97இல் மது வகையறாக்களுக்கு Vend Fee விதித்து 75 கோடி ரூபாய், அதுவரை எங்கேயோ போயக் கொண்டிருந்த வரியை அரசு கஜானாவில் சேர்த்தோம்.

துணி

1997-98ஆம் ஆண்டில் பான் மசாலாவிற்கு வரி விகிதம் 11 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டது மேலும் பரிசுச் சீட்டுகளின்மீது வரி உயர்த்தப்பட்டது. மதுபானங்களுக்கு ஆயத் தீர்வையும், Vend Fee-யும் உயர்த்தப்பட்டன. 1998-99ஆம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகளுக்கு வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. மேலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வகைகள் மற்றும் சிகரெட்டுக்கும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கும் வரி விதிக்கப்பட்டது. கேளிக்கைகள் வரிச் சட்டத்தின்கீழ் கேளிக்கைப் பூங்காவில் உள்ள ஒவ்வொரு கேளிக்கை இனத்திற்கும் செல்வோர்களிடம் வசூலிக்கப்படும் தொகைமீது 20 விழுக்காடு கேளிக்கை வரியாக விதிக்கப்பட்டது. இவ்வரித் தொகையைப் பூங்காவின் உரிமையாளர் ஏற்க வேண்டும். இவ்வகையில் வரும் வருவாயில் 90 விழுக்காடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படும்.

1999-2000 ஆண்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் பான் மசாலாவிற்கு வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. மேலும் இந்தியாவிலே தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகை பானங்களுக்கு 12.11.1999 முதல் 40 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக வரி விகிதம் உயர்த்தப்பட்டது.

23.1.2000 முதல் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் - நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். அந்த விஷயம், அதை நான் ஏற்கெனவே குறித்து வைத்திருக்கிறேன் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொல்வது நலமென்று கருதிச் சொல்லுகிறேன். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விற்பனை வரியில் சமச்சீர் தளமுறை நடைமுறைப்படுத்த வேண்டி வந்த வகையில் தமிழ்நாட்டில் சில பொருட்களின்மீது வரி விகிதங்களை உயர்த்த வேண்டி வந்தன. காற்றூட்டப்பட்ட பானங்கள், ஆகாய வானூர்திகள், திரைப்படத் தயாரிப்புக்கான உபகரணங்கள், மின்னணு விளையாட்டுப் பொருட்கள், மத்தாப்பு மற்றும் பட்டாசு வகைகள், மோட்டார் வாகனங்கள்