கலைஞரின் சட்டமன்ற உரைகள்
477
தமிழக அரசுக்குக் கூடுதல் நிதி வர வாய்ப்புள்ளது. அதனாலும் நமது பற்றாக்குறையை ஓரளவிற்குச் சரிக்கட்ட இயலும்
தமிழ்நாட்டில் நிலுவையிலே உள்ள வணிக வரியைக் கூடுதலாக வசூலிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு, அதன் காரணமாகவும் இந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட இயலும்.
மத்திய அரசு அண்மையில் ரேஷன் அரிசி விலையை உயர்த்தியபோது தமிழக அரசு அந்த உயர்வை மக்கள் மீது திணிக்காமல் 300 கோடி ரூபாய் மானியமாக அந்த விலை உயர்வு காரணமாக தர ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது அனைத்து மாநிலங்களும், மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற அரிசி விலை உயர்த்தப்பட்டதைக் குறைக்க வேண்டுமென்று மத்திய அரசோடு வாதிட்டுக்கொண்டு இருக்கின்றன. அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமேயானால், தமிழக அரசு தருவதற்கு ஒப்புக்கொண்ட 300 கோடி ரூபாய் மானியம் மிச்சப்படுவதற்கு நமக்கு வாய்ப்புள்ளது அதன் காரணமாகவும் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
விவாதத்தில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் செல்வி ராணி அவர்கள் மொத்த வருவாயில் 10 விழுக்காடு மட்டுமே மக்களுக்கு நேரடியாகச் செலவு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள். அது தவறான கருத்து. 2000 2001க்கு மதிப்பிடப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த வருவாய் 18,406 கோடி ரூபாய். அதிலே 10 விழுக்காடு என்பது, கெ சல்வி ராணி அவர்கள் சொன்னதைப் போல, 1,840 கோடி ரூபாய்தான். ஆனால் வருவாய்க் கணக்கிலே பொது விநியோகத் திட்டத்திற்கு 1,700 கோடி, முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு 200 கோடி, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு 104 கோடி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழை திருமணத் திட்டத்திற்கு 50 கோடி, நமக்கு நாமே திட்டத்திற்கு 30 கோடி, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு 75 கோடி. இலவச மின்சாரத்திற்காக அரசு க தரும் 250 கோடி, மாணவர்களுக்கான பஸ் பாஸ் 80 கோடி, இப்படி மக்களுக்கு நேரடியாகச் செலவு செய்யப்படும் திட்டங்களுக்கு 4,326 கோடி ரூபாய் என்கிற போது 10 சதவீதம் என்று கூறியது