உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

நிதிநிலை அறிக்கை மீது

விதிவிலக்கானவர்கள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி (மேசையைத் தட்டும் ஒலி) கர்நாடக முதல்வர் திரு. எஸ்.எம். கிருஷ்ணா, குஜராத் முதல்வர் திரு. கேசுபாய் பட்டேல் என்று Hindu பத்திரிகையிலே ஒரு செய்தி.

அதைத் தொடர்ந்து, Economic and Political Weekly, 12.02.2000, அதிலே ஒரு கட்டுரைப் பகுதியில்,

"Overall, Tamil Nadu could be considered as one State which is most successful in reducing regional disparities in economic and social development even when there was substantial variation in the natural endowments in different parts of the State. This was achieved by a combination of public policies and private initiatives." அதாவது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலேயுள்ள இயற்கை வளத்தில் மிகுந்த வேறுபாடு

ல் காணப்பட்டாலும்கூட, அவற்றிற்கிடையேயுள்ள பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளைக் குறைப்பதில் பெருவெற்றி கண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். (மேசையைத் தட்டும் ஒலி) தனியார் முயற்சிகளையும், பொதுமக்களுக்கான அரசின் கொள்கை களையும் ஒருங்கிணைத்ததன் காரணமாக, இந்த வெற்றி சாத்தியமாயிற்று என்று Economic and Political Weekly என்கின்ற ஒரு பிரபலமான பத்திரிகை குறிப்பு எழுதியிருக்கின்றது.

இதிலே, இந்த அறிக்கை பற்றி உரையாற்றிய நம்முடைய அருமை நண்பர் அழகிரி அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், வெளியிலேயிருந்து முன்னாள் முதலமைச்சர் மு செல்வி ஜெயலலிதா அவர்கள், இங்கே அவருடைய வாரிசாக இருந்து பேசிக்கொண்டிருக்கிற சுந்தரம் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர், தம்பி கணேசன் அவர்கள், என்னுடைய நீண்டநாள் நெருங்கிய நண்பர் சுதர்சனம் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சயின் சார்பில் உரையாற்றிய சந்தானம் அவர்கள் (குறுக்கீடு) Forward Block கட்சியைச் சேர்ந்த சந்தானம் அவர்கள், இரண்டு பேருமே பாட்டாளிகள்தான் இவர்களெல்லாம் விவசாயிகளுக்கு ஒன்றுமேயில்லை, ஒன்றுமேயில்லை என்று சொன்னார்கள். நான்கூட, சந்தானம் அவர்கள் சொன்னதாகப் பத்திரிகைகளிலே பார்த்தேன். யானைப் பசிக்கு சோளப்பொரி மாதிரியாகத்தான்