490
நிதிநிலை அறிக்கை மீது
கிருஷ்ணகுமார் வசதி படைத்தவர் அல்ல என்பதால் நிலங்களை ஒரு மடங்கு சந்தை மதிப்பு வசூலித்துக்கொண்டு ஒப்படை செய்யவும், அந்நிலங்கள் சென்னையின் புறநகர்ப் பகுதியில் தடையாணை எல்லைக்குள் வருவதால், அதற்குரிய தடையாணையை விலக்கி ஒப்படை செய்யும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. 110 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்த சுமார் 31 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள யூகலிப்டஸ் மரங்களை வெட்டி எடுத்துவிட்டு, 200 ஏக்கருக்கு மேற்பட்ட அளவிற்கு நிலம் வழங்குவதால், தமிழ்நாடு நிலச் சீர்திருத்த உச்சவரம்புச் சட்டப் பார்வைக்குள் வரும் வாய்ப்புள்ளது என்ற நில நிர்வாக ஆணையாளரின் எச்சரிக்கையையும் ஒதுக்கிவிட்டு, அரசு கொள்கையின்படி தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனங்களுக்கு பெரும் அளவிலான நிலத்தை ஒப்படை வழங்க இயலாது, குத்தகை அடிப்படையில்தான் நிலங்கள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசு ஆணையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இரண்டு மடங்கு மார்க்கெட் விலை வசூல் செய்துகொண்டு, ஒப்படை செய்யலாம் என்று அ.தி.மு.க. அரசு 25.2.1995 அன்று ஆணை பிறப்பித்தது. கழக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, இந்த நில மோசடியை ஆய்வு செய்து, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கிய நில ஒப்படை ஆணையை 31.12.1996 அன்று இரத்து செய்துவிட்டது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நாங்கள் இப்போது அறிவித்திருக்கிற முந்திரி சாகுபடித் திட்டம், இது போன்ற காரியங்களுக்காக நிச்சயமாக அல்ல. அரசுக்குச் சொந்தமான நிலம் குத்தகைக்கு விடப்படுவதற்கு என்று ஏற்கெனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்பாட்டிலே இருக்கின்றன. அதன்படி நிலத்தின் market விலையை அனுசரித்து அதன் அடிப்படையில் குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்படும். அந்த அடிப்படையிலோ அல்லது சாகுபடிக்கு என்று தேர்வு செய்யப்படும் நிலங்களின் market விலையை அனுசரித்து, உயர்ந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்த பிறகு, எவ்வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக tender அடிப்படையிலே அரசுக்குச் சொந்தமான நிலங்களை முந்திரி சாகுபடிக்கு குத்தகைக்காக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது
2