கலைஞரின் சட்டமன்ற உரைகள்
-
493
நேற்றைக்குச் சொன்னார்கள். அது சரியில்லை, தவறு. ஏனென்றால் அந்தக் கூட்டத்திற்கு வணிகர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு - சிறு தொழிலதிபர்கள் பலரும் வந்திருந்தார்கள்
1. தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், TANSTIA
2. இந்திய சிறுதொழில் கழகங்களின் கூட்டமைப்பு (தெற்கு மண்டலம்).
3. தமிழ்நாடு சிறிய மற்றும் குறுந்தொழில் எச்.டி.பி.எப் ஓவன் சாக்குகள்/பைகள் தயாரிக்கும் சங்கம்
4. தலைவர், தேசிய சிறு தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு.
5. தலைவர், தமிழ்நாடு சிறு Tyre retreading பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம்.
6. தமிழ்நாடு மெட்டல்வேர் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கம்.
7. தமிழ்நாடு மாநில கார்டு உற்பத்தியாளர்கள் சங்கம். 8. தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம்.
9. கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ஆகிய இந்தச் சங்கங்கள் எல்லாம் அழைக்கப்பட்டு அவர்களுடைய கருத்துகளும் கேட்கப்பட்டிருக்கின்றன
அவர் இன்னொன்றும் சொன்னார். வேளச்சேரியிலே கடந்தகால அரசு அமைத்த பெண்களுக்கான தொழிற் பேட்டையைக் கைவிட்டுவிட்டோம் என்று சொன்னார். திடீரென்று சுப்பராயன் அவர்கள், கடந்தகால அரசு அதை அமைத்தது, அதை அமைத்தது எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் என்று பேசினார். என்னவென்று தெரியவில்லை எனக்கு. திடீரென்று அப்படிப் பேசினார். (சிரிப்பு) நான் அவருக்குச் சொல்லிக்கொள்கின்றேன். கடந்தகால அரசு அறிவித்தது, அறிவித்ததோடு சரி. பிறகு அது என்னவோ