உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

499

உங்கள் பெயரைச் சொல்லித்தான் முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். நீங்கள் உட்காருங்கள்.

டாக்டர் அ. செல்லக்குமார்: அது தவறான தகவல்.

நான் அதைச் சொல்லிவிடுகிறேன்

மாண்புமிகு

பேரவைத் தலைவர்: அது

தேவையில்லை, நான் அதை அனுமதிக்க முடியாது. நீங்கள் (குறுக்கீடு) நீங்கள் உட்காருங்கள்.

உட்காருங்கள்

முதலமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே... (குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான் தெளிவாகச் சொன்னேன். முதலமைச்சர் பதில் சொல்கிறபோது சொன்னார்கள் என்றால் கேளுங்கள். விதி 110ல் கேள்வி கேட்கக் கூடாது. முதலமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, சத்துணவு பற்றி, அது தனி இலாகா, அந்தத் தனி அமைச்சர் அதுபற்றி நேற்றைக்கே விளக்கம் அளித்திருக் கின்றார்கள்.

நான் நிதிநிலை அறிக்கையிலே கோடிட்டுக் காட்டியுள்ள நாங்குநேரி திட்டம் ஒரு ஒளிமயமான முன்னேற்றத்தை உருவாக்கவிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன். நாங்குநேரியில் ஒரு பூங்கா அமைக்க 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டு, அதிலே ஏறத்தாழ 2000 ஏக்கருக்கு மேற்பட்ட இடம் நம் கைவசம் வந்திருக்கின்றது. 3000 ஏக்கரும் மொத்தமாக அரசுக்கு வரவிருக்கிறது. அந்த நாங்குநேரியைப் பற்றிய ஒரு தகவலை மாத்திரம் இங்கே நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அறிக்கையில்,

நிதிநிலை 'நாங்குநேரி உயர் தொழில்நுட்ப தொழிற்பூங்காவுக்காக High-tech industrial park- சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டிருக்கிறது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கை - Detailed Feasibility Report ஒன்றை இரு பிரபல நிறுவனங்கள்