உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

நிதிநிலை அறிக்கை மீது

உரை : 30 :

நாள் : 2.2.2001

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இடைக்கால நிதிநிலை அறிக்கைமீது தொடர்ந்து நடைபெற்றுள்ள விவாதத்தில் இறுதியாக இன்றையதினம் சில கருத்துக்களை இந்த அவையிலே எடுத்து வைக்க நான் முன்வந்துள்ளேன். 1996 ஆம் ஆண்டு 4வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்த ஆட்சியின் சார்பில் ஐந்தாண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை இந்த மாமன்றத்தின் முன்னால் நான் வைத்திருக்கின்றேன். தற்பொழுது வைத்துள்ளது இடைக்கால நிதிநிலை அறிக்கைதான்.

இங்கே முதலில் இதயம் திறந்து சில கருத்துக்களைக் கூற நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த அவையை இந்த ஐந்தாண்டு காலமாக காலமாக பெருமளவுக்கு அமைதியாகவும், கண்ணியத்தோடும் கட்டுப்பாடாகவும் தங்களுடைய ஆற்றலால் நடத்திச் சென்றிருக்கிற பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) அவருக்குத் துணையாக இருந்து அவையின் துணைத் தலைமை பொறுப்பை ஏற்று, சீரோடு இந்த அவையை நடத்திய பேரவைத் துணைத் தலைவர் பரிதி அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி அரசுக்கு தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும் கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இந்த ஐந்தாண்டு காலம் என்னோடு ஒத்துழைத்து, துணை நிற்கின்ற பேராசிரியர் உள்ளிட்ட அமைச்சரவை