உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

நிதிநிலை அறிக்கை மீது

மிச்சம் இருக்கின்ற அவர்களுடைய வாரிசுகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல்.

ஏற்கெனவே 18 விழுக்காட்டிலேயே லேயே பழங்குடி மக்களுக்கும் என்று இட ஒதுக்கீடு இருந்தது. அதை மாற்றி, ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடு என்றும், பழங்குடி மக்களுக்கு 1 விழுக்காடு என்றும் மொத்தம் 19 விழுக்காடாக ஆக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டு, 4வது முறையாக பொறுப்புக்கு வந்துள்ள இந்தச் சூழ்நிலையில் அன்றைக்குக் கூட பேசும்போது திரு. சுப்பராயன் அவர்கள் குறிப்பிட்டர்கள். ஒரு அரசு செய்யக்கூடிய சாதாரண பணிகளைத்தான் செய்திருக் கிறீர்கள் என்று, பெரிய பணிகளையும் செய்திருக்கிறோம். முக்கியமான சட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நான் இங்கே காட்டிய பட்டியல்களிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

பெரிய திட்டமாக, தென்பகுதியிலேயுள்ள மாவட்டங்களை, அங்கேயிருக்கின்ற மக்களை வாழவைக்கக்கூடிய திட்டமாக, அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டமாக 8000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு நாங்குனேரியில் சர்வதேச தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப பூங்கா ஒன்றிற்கு 11 ஆம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற இருக்கிறது என்கிற மகிழ்ச்சிகரமான செய்தியை (மேசையைத் தட்டும் ஒலி ) இங்கே நான் ) தெரிவிக்க விரும்புகிறேன். இன்றுகூட ஒரு பத்திரிகையில் திருமணத்திற்காக வரப்போகிற முதல்வருக்காக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டுவிழாவிற்குச் செல்கின்ற முதல்வர் ஒரு திருமணத்திலே கலந்துகொள்கிறாரேயல்லாமல், திருமணத்திற் காகச் செல்கின்ற முதல்வர் அடிக்கல் நாட்டு விழாவிலே கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால், அதைப் பற்றிச் சில விவரங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

நாங்குனேரி வளாகத்திற்காக 2200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசிடமிருந்து வெளிநாட்டு முதலீட்டிற்கான ஒப்புதல் பெறப்பட்டாகிவிட்டது மத்திய அரசு இந்த வளாகத்தை ஏற்றுமதி வளாகம் என்றும்