உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

நிதிநிலை அறிக்கை மீது

வேண்டிய நேரத்தில் கணினி துறையில், சாஃப்ட்வேர் துறையில் வளர முடியாமல் போய்விட்டது. எனவே அவர்கள் முன்கூட்டியே வளர ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே 7,000 கோடி ரூபாய் அல்லது 8,000 கோடி ரூபாய்க்கு அவர்களால் ஏற்றுமதி செய்ய முடிகிறது.

நான் சொல்கிறேன் 1995 ஆம் ஆண்டு நம்முடைய ஏற்றுமதி மதிப்பு 12 கோடி ரூபாய். இந்த நான்கு ஐந்து ஆண்டுகால வளர்ச்சியில் நாம் எடுத்த ஆக்கப்பூர்வமான ஆர்வம் மிகுந்த செயல்பாடுகள் காரணமாக ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சுணக்கத்திற்குக் காரணம் நாம் அல்ல என்பதையும், ஆனால் சுறுசுறுப்புக்குக் காரணம் நாம்தான் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

உழுவோரும் நுகர்வோரும் பயன்பெற 14-11-2000க்குள் 100 உழவர் சந்தைகள். தொழில் முதலீடுகள் இந்தியாவிலேயே நாம்தான் முதல் இடம்; இந்தியாவிலேயே மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் பணியாற்றுவதில் நாம்தான் முதல் இடம்; அமெரிக்காவிற்குச் செல்ல உலகிலேயே பெறுவதில் நாம்தான் முதலிடம்.

விசா

பற்றிப்

தம்பி செல்லக்குமார் கூட அதைப் பேசும்போது, இந்த கணினி அல்லது சாஃப்ட்வேர் எல்லாம் தானாக வளர்ந்தது, நீங்கள் ஒன்றும் வளர்த்துவிடவில்லை என்று குறிப்பிட்டார்கள். நான் அவருக்கும் சொல்கிறேன், மற்றவர்களுக்கும் சொல்கிறேன். இந்தியாவிலேயே எங்கேயும் எந்த ஒரு மாநிலத்திலும் மாணவர்களுக்கு கணினி கற்பிக்கின்ற காரியம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் நடைபெற வில்லை. (மேசையைத் தட்டும் பலத்த ஒலி)

கல்லூரிகள் மற்ற பள்ளிகளிலே சேர்ந்து 1 இலட்சம் மாணவர்கள் இன்றைக்கு கணினி கல்வி பெறுகிறார்கள் என்றால் கல்வித் துறையின் மூலமாக, தனியார் துறையைப் பயன்படுத்தி இந்தக் காரியத்தை இந்த ஆட்சி கடந்த ஓராண்டு காலத்திலே செய்து முடிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான் அமெரிக்காவிற்குச் செல்ல உலகிலேயே விசா பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கிறது என்பதையும் நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.