உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

57

இடம் உண்டா? கிடையாது. திடீரென்று மாறுகிறார்கள். இராஜாஜி கவர்னர்-ஜெனரலாக வந்ததோடு முடித்துவிட்டு, அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் என்று போட்டு, இந்திரா காந்தி தலைமையில் புதிய மந்திரிசபை டெல்லிமாநகரில் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பதவியேற்றது என்பதோடு நிறுத்தியிருக்கிறார்கள்.

து.

காமராஜர் இங்கு ஆண்டது பற்றி அந்நூலில் கிடையாது. இங்கே பெரியவர் பக்தவச்சலம் ஆண்டதுபற்றிக் கிடையாது. அண்ணா ஆட்சி புரிந்தது கிடையாது. அடியேன் தலைமையிலே ஆட்சி நடந்தது. அது கிடையாது. அது வேண்டாம். அது வராது. ஏனென்றால் அன்னை அஞ்சுகம் நிலையங்களெல்லாம் மாற்றப்படுகிற நேரத்தில் என்னுடைய பெயர் இதிலே வரும் என்று நான் எதிர்பார்க்க முடியாது அதிலே திடீரென்று 80ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒன்பது மாநிலங்களில் சட்ட மன்றங்களுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று திரு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையின் கீழ் மந்திரிசபை அமைத்தது என்று அவருடைய படம், பெரிய படம் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. காமராஜருடைய படம் உண்டா? பக்தவத்சலத்தினுடைய படம் உண்டா? இவைக ளெல்லாம் கிடையாது. இவர்கள் இடையிலே ஆட்சியிலே இருந்திருக்கின்றார்கள். நான் பாவி, என்னுடைய படம் தேவையில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் படம் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிடப் பட்டு, கீழே குறிப்பு என்ன தெரியுமா? இந்தியப் பிரதமர், தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகியோருடைய படங்களைச் சேகரித்து உங்கள் படத் தொகுப்புப் புத்தகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளவும். 'இதையும் சேர்த்து இந்திய வரலாறு ஆறாம் வகுப்புப் பாட நூல் வெளி வந்திருக்கிறது என்றால் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக நடைபெறுகின்ற அரசாங்கமாக இருக்கிறதே தவிர நாட்டிலே இருக்கின்ற வேதனைகளைப் போக்குகின்ற அரசாக இது இல்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு கூறி அமைகின்றேன். வணக்கம்.