78
நிதிநிலை அறிக்கை மீது
மேற்குவங்கம் 25.2 சதவீதமும், ஜம்மு-காஷ்மீர் 26 சதவீதமும் உத்தரப் பிரதேசம் 27.7 சதவீதமும், குஜராத் 34 சதவீதமும், இமாசலப் பிரதேசம் 37.9 சதவீதமும், ஆந்திரா 39.5 சதவீதமும், கர்நாடகா 52 சதவீதமும், மராட்டியம் 53.8 சதவீதமும், பஞ்சாப் 74.9 சதவீதமும், கேரளா 94.3 சதவீதமும், தமிழ்நாடு 98 சதவீதமும், அரியானா 100 சதவீதமும் மின் வசதியைச் செய்திருப்பதாகக் கூறுகிறது அதாவது அரியானா என்பது, தமிழ் நாட்டிலுள்ள ஒரு மாவட்ட அளவேயுள்ள ஒரு மாநிலம் என்கின்ற காரணத்தால், அங்கே நூறு சதவீதம். அரியானா போன்று பல பகுதிகளைக் கொண்ட நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகமான பரப்புள்ள தமிழ்நாட்டில் அன்றைக்கு 98 சதவீதம் கிராமப்புறங்களில் மின் வசதியைச் செய்து கொடுத்திருக் கிறோம். ஆகவே இருபது அம்சத் திட்டங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலும் ஒழுங்காக நிறைவேற்றப்பட்டன என்று காட்டுவதற்காக இவற்றைக் குறிப்பிட்டேன். அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் இருபது அம்சத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னாலேயே கூட அந்தத் திட்டங்கள் எல்லாம் படிப்படியாக இங்கே நிறைவேற்றப் பட்டன என்கின்ற புள்ளிவிவரங்களை நானும், மாண்புமிகு நாவலர் அவர்களும் கூட அன்றைக்கு சட்டப்பேரவையிலே எடுத்து விளக்கி இருக்கிறோம் என்பதற்காகத்தான் இதை இங்கே எடுத்துச் சொன்னேன். மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தன்னுடைய பதிலுரையில் அதாவது வரவு செலவுத் திட்டத்தின் மீது பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் வழங்கும்போது தமிழகம் எந்த அளவிற்கு எந்த எந்தத் துறைகளில் வளர்ந்திருக்கின்றது என்ற பட்டியல் தரப்படும் என்று கூறிவிட்டு விவரங்களைத் தந்திருக்கின்றார்கள். ஆனால் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் குறிப்பிடும் அந்த வளர்ச்சி எல்லாம் ஒரு சிலரை பணக்காரர்களாக்கத்தான் பயன்படக்கூடிய வளர்ச்சியே தவிர, மக்களுக்கு நன்மை செய்யக்கூடியதல்ல. அப்படியானால் சத்துணவுத் திட்டம், சிறார்களுக்கு சீருடை வழங்குதல் இவைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய