உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

நிதிநிலை அறிக்கை மீது

விவரத்தையே இந்த அவையிலும் சொல்லுவதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளாக நிதி அமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் மொத்தம் 9 சாராயக் கலவைத் தொழிற் சாலைகள் இருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகள்தான் தமிழகத்திற்குத் தேவையான முழுஅளவு சாராயத்தையும் விற்பனை செய்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்கு அரசாங்கம் ஒரு பாட்டில் சாராயத்திற்கு அனுமதித்துள்ள விலை ரூ.7.41 காசு. ஒரு பாட்டில் என்றால் 750 மில்லி லிட்டர் கொண்டது. ஒரு லிட்டருக்கு ரூபாய் 11.88 காசு என்றால் 750 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டில் ரூபாய் 7.41க்கு விற்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த விலை எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது து என்று பார்த்தால், எரிசாராயத்திற்கு ஆகிய மொத்த விலை 85 காசு மட்டும்தான். ஆனால் இந்தச் சாராயத்தோடு தண்ணீர் கலக்கப்பட்டு அது பாட்டிலில் அடைக்கப்பட்டு அது விற்பனைக்காக வருகிற நேரத்தில் ஒரு பாட்டில் சாராயத்தின் விலை ரூபாய் 7.41 காசு ஆகிறது. அது எந்த வகையில் என்றால் எக்சைஸ் வரி ரூபாய் 3, விற்பனை வரி 44 காசு. சர்சார்ஜ் 0.02 காசு ஆக மொத்தம் ரூபாய் 3.46 காசு. இவை போக எரிசாராயத்திற்கு 85 காசுதான். காலி பாட்டிலுக்கு இந்த அரசு நிர்ணயித்திருக்கிற விலை 2 ரூபாய். பாட்டில் மூடிக்கு 25 காசு. லேபிளுக்கு 5 காசு. பேக்கிங் மெட்டிரியலுக்கு 17 காசு. போக்குவரத்துச் செலவு 30 காசு. வேஸ்ட்டேஜ் 4 காசு. பிறகு அனுமதிக்கப்பட்ட லாபம் 29 காசு. ஆக மொத்தம் ரூபாய் 7.41 காசு. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எரி சாராயத்திற்கு ஒரு பாட்டில் விலை 85 காசுதான். ஆனால் அது பாட்டிலில் அடைக்கப்பட்டு இவ்வளவு சடங்குகளும் செய்யப்பட்டு வெளியே போகிறபோது, ஒரு பாட்டில் எரி சாராயத்தின் விலை ரூபாய் 7.41 காசு என்று ஆகிறது. ஒரு பாட்டில் ஒன்றுக்கு தொழிற்சாலை 29 காசு லாபம் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசாங்கமே அனுமதித்திருக்கிறது. காலி பாட்டிலுக்கு இந்த அரசு 2 ரூபாய் அனுமதிக்கிறதே எந்த ஒரு கலவைத் தொழிற்சாலையாவது அவ்வப்போது புதிய பாட்டில்களை வாங்கி உபயோகிக்கின்றதா என்றால் இல்லை.