84
நிதிநிலை அறிக்கை மீது
திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். எவ்வளவுதான் அண்ணா சமாதியில் நின்று போதித்தாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் 84 இலட்சம் லிட்டராக இருந்தது இப்போது அது பெருகி, மாதம் ஒன்றுக்கு 1.50 இலட்சம் லிட்டர் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இந்த 9 கலவைத் தொழிற்சாலைகளும், 1.50 இலட்சம் லிட்டர் சாராயத்தை 750 மில்லி பாட்டில்களில் அடைத்தால் 2 கோடி பாட்டில்கள் 2 ஆகின்றன. நான் ஏற்கெனவே சொன்னேன் பாட்டில் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் லாபம் என்று. ஆகவே 2 கோடி பாட்டில்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் லாபம் வருகிறது. மாதம் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் அந்த 9 தொழிற்சாலைகளுக்கு லாபமாகக் கிடைக்கிறது. இது 9 குடும்பங்களுக்குப் போய்ச் சேருகிறதா அல்லது இவைகள் எல்லாம் பினாமியாக ஒரே குடும்பத்திற்குப்போய்ச் சேருகிறதா என்ற ஆராய்ச்சியில் நான் இந்த அளவிலே இறங்க விரும்பவில்லை. 9 பேருக்குச் சென்றாலும், ஒருவருக்குச் சென்றாலும், அதை அரசு ஆராய்ந்து பார்த்து, 36 கோடி ரூபாய் இலாபத்தை, வருமானத்தை அரசே பெறுகிற அளவிற்கு ஏன் அதை அரசுடைமையாக்கக் கூடாது என்று நிதியமைச்சர் அவர்களைக் கேட்கிறேன்.
டி
இதை 1983ஆம் ஆண்டு நான் பேரவையிலே விளக்கிப் பேசினேன். நான் பேசிய பிறகு, அதன் விளைவாக என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். விவரம் எனக்குத் தெரியாது, இருந்தாலும் நன்றி கூறிக் கொள்கிறேன் சாராய மொத்த வியாபாரத்தை அரசாங்கமே எடுத்துக் கொண்டது. அதன் காரணமாக பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானம் வந்தது. அதிலேகூட சிறு தவறு ஏற்பட்டு, பல கோடி ரூபாய் வருமானம் வந்ததால் அதிலே ஏழு எட்டு கோடி என்று நினைக்கிறேன் வருமான வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு, அதைத் தவிர்க்கும் வகையில் deVneFe என்ற
முறையில் மாற்றப்பட்டு, வருமான வரி கட்டவேண்டிய நிலைமை தவிர்க்கப்பட்டு, அரசாங்கக் கார்ப்பரேஷன் மூலமாக சாராய மொத்த வியாபாரத்தை எடுத்து நடத்துவதால் அந்த மொத்தப் பணமும் அரசாங்கத்திற்கு, கிட்டத்தட்ட