பக்கம்:நித்தியமல்லி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


தம்பி, உங்க அன்பு துய்மையானது. நீங்களும் என் அருமை மகளும் சகல செளபாக்கியங்களோடு: திர்க்காயுசாய் நீடுழி சுபமாய் வாழவேணும்னு ஆசீர் வாதம் செய்யிறேன். என் தாய் மனசு மெய்யாவே. இப்பதான் அமைதி அடைஞ்சிருக்கு!...” என்று. வாழ்த்துச் சொன்னாள் மரகதத்தம்மை. அவளது. கண்ணிருக்குள் ஆனந்தம் விளையாடியது. உதயணனுக் கும் தமிழ்ச்சுடருக்கும் அவள் கையால் விபூதி பூசி விட். டாள் இருவரின் வணங்குதலையும் ஏற்ருள். .

.." என்று உணர்ச்சிப் பெருக்குடன் இசுடர் அன்னையைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே மெய்மறந்து நின்ருள் ! பரீட்சை நெருங்கு தில்லே! சீக்கிரம் சமையல் செஞ்: சிடுறேன். விருந்து சாப்பிட்டுட்டுப் போயிடலாம்னு உன் அத்தான்கிட்டே சொல்லம்மா ஒரு அரைமணி. நேரம் உன் படிப்பும் மாப்பிள்ளையின் படிப்பும் என்னலே, கெட்டதாக இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும். 'பரீட்சை படிப்பு சம்பந்தமாய் பேசிக்கிட்டே இருங்க.." நொடி யிலே சமைச்சிடுறேன்!...” என்ருள் மரகதத்தம்மாள். உதயணனும் தமிழ்ச்சுடரும் ஒருவரையொருவர். வினயத்துடனும் விவேகத்துடனும் பார்த்துக்கொண்டு. பட்டப் பரீட்சைக்கு வரும் பாடங்களைப்பற்றி ஆராய, முனைந்தார்கள். - - . - ஏறுமுகச் சூரியன், திறக்கப்பட்ட அந்தச் சாளரக் கதவுகளை நலியாமல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந் தான்!. “. . ...& - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/141&oldid=1277382" இலிருந்து மீள்விக்கப்பட்டது